Posts

Showing posts from October 19, 2018

33/330:திருக்குறள்-கொல்லாமை

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கையவர்.பிணியொடு துன்ப வாழ்வு வாழ்பவர் முற்பிறவில் பிற உயிர்களைக் கொன்ற பாவத்தை செய்தவரே ஆவர்.இந்த பிரபஞ்சத்தில் மானிட வாழ்க்கை வாழுக்கின்ற மனிதர்கள் நோய்யோடும் துன்பத்தோடும் துரங்களோடும் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்கள் முன் ஒரு பிறவியில் மிகவும் பாவம் செய்தவர்கள் உயிர்களை அழித்து கொடூரங்களை புரிந்தவர்கள் அதனால்தான் அவர்கள் தங்களின் வாழ்வில் துன்பத்தை அனுபவத்து வாழவேண்டிய நிலை அந்த கொல்லலப்பட்ட உயிர்களின் சாபங்கள் எனலாம் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

33/329:திருக்குறள்-கொல்லாமை

கொலை வினையராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவாரகத்து.கொலைத்தொழில் செய்பவர்க்கு அதன் சிறுமை அறியாமலிருப்பினும் அறிந்தவர்க்கு அத்தொழில் இழிவானதே.உயிர்களை கொலை செய்து வாழ்க்கை நடாத்தும் மனிதர்களுக்கு அது பெருமையாக இருந்தாலும் அதன் வாழ்வியல் பண்பால் சிறுமையே என்பதை அறிந்திராதிருந்தாலும் அளிவுள்ளவர்களுக்கு கொலை என்னும் தீய செயலை செய்பவர்களை இழிவான மனிதர்கள் என்றே இனக்காட்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

33/328:திருக்குறள்-கொல்லாமை

  நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும்  ஆக்கம் கடை.படைவீரனுக்கு போரில் விழும் கொலைகள் வீரத்திற்கு சிறந்தது.ஒருவனுக்கு தனிப்பட்ட கொலை இழிவானது.படைவீரர்களுக்கு அவர்கள் களத்தில் செய்கின்ற கொலைகள் எதிரிரை அழித்தல் அவர்களின் வீரத்திற்கு சிறந்ததாகும்.ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதன் செய்கின்ற கொலைகள் மற்றவர்கள் உயிர்களை பலி எடுத்தல் இழிவானது ஆகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும்ஒ ரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

33//327:திருக்குறள்-கொல்லாமை

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.தன் உயிரே போவதானியினும் தான் மற்றவருடைய இனிய உயிரை போக்கும் செயலை செய்யாதிருக்க.சிறந்த மனிதர்கள் தன் உயிரே போனாலும் பிறருடைய உயிர்கள் இறந்து போவதை விருப்ப மாட்டார்கள் உயிர்வதைகள் கொலைகள் என்னும் தீய செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

33/326:திருக்குறள்-கொல்லாமை

கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ் நாள் மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.கொல்லாமை எனும் அறத்தை கொண்டவன் உயிரைக்கொண்டு செல்லயமனுக்கும் அஞ்சுவான்.உயிர்களை அழித்து வாழ்வியல் நடத்தாத மனிதர்களின் சிறந்த வாழ்வியல் திறனை கொண்டவர்களின் உயிரை அவர்களின் இறப்பு காலம் வந்து விட்டாலும் யம தர்ம ராஜா கூட யாமலோகம் எடுத்து செல்ல தயங்கி நிற்பான் இப்படியான சிறந்த உயிர்க்கு ஏன் இந்த மரணமென்று  எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.