Posts

Showing posts from September 10, 2020

118/1180:கண்விதுப்பழித்தல் திருக்குறள்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து.பறை போன்ற விழிகளுடைய பெண்களிடமிருந்து மறைவை ஊரார் அறிதல் சிரம்மில்லை.அகட்டு விரிந்த கருவிழிகளுடைய பெண்களின் கண்களிருந்து வெளியாகும் பார்வை கொண்டே ஊர் மக்கள் புரிந்து கொள்வார்கள் இது காதலா இல்லையா என்பதையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1179:கண்விதுப்பழித்தல்

வாராக்கால் துஞ்சா வரின்ஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன் கண்.அவர் வராவிடினும் தூங்கா விரினும் தூங்கா இருநிலையிலும் கண்கள் பெருந்துயரப்பட்டன. மனதுக்கு பிடித்வர் வராமல் இருந்தாலும் கண்களுக்கு உறக்கமில்லை வந்துவிட்டார் என்றால் கண்களுக்கு உறங்குவதில்லை கண்கள் காதல்வசப்பட்டிருப்பதால் எந்த நிலையிலும் உறங்க மறுக்கின்றதென்றால் அது காதலாகத்தான் இருக்கமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1178:கண்விதுப்பழித்தல்

பேணாது பெட்டார் உனர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண். இதயமின்றி காத்தவர் ஒருவர் உளார் அவரைப்பாராது கண்கள் தூங்கா. காதலித்த பெண்ணை சேர்த்து கொள்ளும் எண்ணம் மனதில் இல்லாதவர் வாழ்ந்து வருகின்றார் அவரைக்காணாது கண்கள் உறங்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1177:கண்விதுப்பழித்தல்

உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். உருகி விரும்பிக் காதலரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி வறண்டு போகட்டும்.விரும்பி ஆசையுடன் விருப்பியவரை கண்டுகழித்த விழிகள் அழுது அழுது கண்ணீர் வற்றி வறண்டு வாடட்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1176:கண்விதுப்பழித்தல்

ஒஒ இனிதே எமக்கிந்தநோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது.எனக்கு இந்துயரந்தைத் தந்த கண்கள் தாமும் துன்பப்படுவது எவ்வளவோ மகிழ்ச்சி .ஆணுக்கு பெண்ணைக்காணும் போது காதல் துயரத்தை அழிகின்ற கண்கள் அதே கண்கள் துன்படும்போது எப்படி மகிழ்சியாக இருகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1175:கண்விதுப்பழித்தல்

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.கடலிலும் பெரிய காமம் கொடுத்த என் கண்கள் இன்று துயில முடியாது துன்பப்படுகின்றது. அழகை கண்டமையால் கடுமையான காம ஆசையை பெற்றகண்கள் இப்போது பள்ளியறையில் படுத்துறங்கமுடியாமல் கண்விழித்து அந்த அழகைத்தேடி தவிக்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

118/1174:கண்விதுப்பழித்தல்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்ற உய்வில்நோய் என்கண் நிறுத்து.நீங்காத நோயை எனக்குத் தந்து விட்டக் கண்கள் இனி அழமுடியாமல் வறண்டன.காதல் ஆசையை நிதந்தரமாக தந்த விழிகள் இனிமேல் அழுது புலம்ப முடியாது கண்ணில் கண்ணீர் இல்லாமல்போனதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1173:கண்விதுப்பழித்தல்

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. அன்று விரைத்து பார்த்த கண்கள் இன்று அழுகின்றன இது கேலிக்கு உரியது. அந்தநாட்களில் உற்றுபார்த்து அழகை ராசித்து பார்த்து மயங்கிய கண்கள் இப்போது அழுவதால் இந்த அழுகை சிரிக்கதக்கதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1172:கண்விதுப்பழித்தல்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துரப்பைதல் உழப்பது எவன். ஆராயமல் அவரை நோக்கிய கண்கள் இன்று காணாமல் துன்பப்படுவது ஏன்? எதையுமே யோசிக்காது மயங்கிய பெண்ணின் மான்விழிகள் ஆசையுடனும் காதலுடனும் கண்டவிழிகளை காணத்துடிப்பதுமெனோ என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

118/1171:கண்விதுப்பழித்தல்

Image
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம் காட்ட யாம்கண்டது.கண் காட்டியதால் தீராத நோயை நான் பெற்றேன் நோய் தந்த கண்கள் இப்பொழுது ஏன் அழுகின்றன. கண்களை உற்றுப்பார்ததால்தானே காதல்வந்தது காதலை தந்த கண்கள் இப்போது ஏன் காதலிக்காமல் ஏன் தயங்குகின்றது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.