Posts

Showing posts with the label 32/318 திருக்குறள் இன்னா செய்யாமை

32/318:திருக்குறள்-இன்னா செய்யாமை

தன்னுயிர்க்கும் இன்னாமை தான்றிவான் என்கொலோ மன்னுயிரிக்கு இன்னா செயல்.ஒருவன் செய்யும் தீமை தன்னுயிர்க்கு துன்பம் தருவதையுணர்ந்தும் பிறருக்கு அத்தீமைச் செய்வதேன் ? மானிடர்களின் வாழ்வுதனில் புரியும் தீய செயல்களால் தங்கள் உயிருக்கே ஆபத்து தரும் என உணர்வால் அறிந்து கொண்டால் அந்த தீமையான செயல்களை சமுதாயத்தில் வாழுகின்ற மனிதர்களுக்கு புரிவதுதான் ஏனோ ? என கேள்வி எழுப்புகின்றது இந்த திருக்குறள் பா.தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .