Posts

Showing posts with the label 21/203 திருக்குறள் தீவினையச்சம்

21/203:திருக்குறள்-தீவினையச்சம்

Image
திருக்குறள் : அறிவினுள்   எல்லாந்   தலைஎன்ப   தீய செறுவார்க்கும்   செய்யா   விடல் . ( குறள்  203 -  அதிகாரம் :  தீவினையச்சம் ) பொருள் :   தனக்குத்   தீங்கு   செய்த   பகைவர்களுக்கும்   எத்தகைய   தீய   செயலையும்   செய்யாமல் விட்டுவிடுவதே ,  மனிதனிடம்   இருக்கக்கூடிய   அனைத்து   அறிவிலும்   தலையான   சிறந்த அறிவு   என்று   பெரியோர்   கூறுவர் . விரிவாக்கம் :   தன்னை   எதிர்த்தவர்களுக்கும் ,  தனக்குத்   தீங்கு   இழைத்தவர்களுக்கும்   பதிலுக்குத்   தீமை செய்வதே   மனிதர்களின்   இயல்பாக   இருக்கிறது .  ஆனால் ,  தன்னைச்   சுற்றியுள்ளவர்கள் தனக்குத்   தீமை   செய்தாலும் ,  பதிலுக்கு   அவர்களுக்குத்   தீங்கு   செய்யாமல்   மன்னித்து   விலகி நிற்கும்   உயர்ந்த   மனப்பக்குவமே   மனிதனின்   அனைத்து   ஞானங்களையும்   விடச்   சிறந்த அறிவாகும் ....