Posts

Showing posts from March 27, 2020

105/1050:திருக்குறள்-நல்குரவு

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.வறியவர் முற்றும் துறவியாகாமல் இருப்பது உப்பிற்கும் கஞ்சிக்கும் வீண்.கஸ்டப்பட்டவர்கள் முற்றிலும் துறவிகளாகாமல் வாழ்வது உணவு பண்டங்களுக்கே வீண் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1049:திருக்குறள்-நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. நெருப்பில் கூட தூங்கவும் செய்யலாம் வறுமையில் சிறிதும் கண்மூட இயலாது.எரியும் தீயில் உறங்க முடிந்தாலும் வறுமை என்னும் தீயில் கொஞ்சமும் கண் மூடி உறங்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1048:திருக்குறள்-நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. நேற்று கொல்லுதல் போல வந்து வறுமை இன்று துன்பம் தர வருமோ? நேற்று சாவடிப்பது போல வாழ்வினில் தோன்றிய கஸ்டம் எதிர் காலத்திலும் துன்பங்களை தருவதற்காக வந்து செருமோ என மனிதர்கள் ஏங்குவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1047:திருக்குறள்-நல்குரவு

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப்படும். வாழ்வுக்கு உதவாத வறுமை வந்தால் பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பாள். கஸ்ட துன்பங்கள் வாழ்வினில் வந்தபோதிலும் வாழ்வை நேர்மையாக வாழவிட்டால் பெற்ற தாய்கூட பிறத்தியார் போலவே நடந்து கொள்ளக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1046:திருக்குறள்-நல்குரவு

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். நல்ல பொருளை நன்றாக அறிந்து சொன்னாலும் வறியவர் சொல் சபை ஏறாது.எந்த பெரிய அறிஞராக இருந்தாலும் ஏழையாக இருந்தால் அவரின் சொற்பொழிவை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1045:திருக்குறள்-நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள்சென்று படும்.வறுமையாகிய துன்பத்தில் பல துன்பங்கள் வந்து சேரும்.மனிதர்கள் கஸ்டங்களில் இருக்கும் போதுதான் அதற்குள் வேறு விதமான கஸ்டங்களும் அதற்கு மேலாக வந்து சேருமன எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1044:திருக்குறள்-நல்குரவு

இறபிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். வறுமை உயர் குலத்தோரையும் தாழ்வான சொற்களைச் சொல்லச் செய்யும். பெரியகுடுப்பத்து மனிதர்களாக இருந்தாலும் கஸ்டமெனும் நிலைவரும் போது இழிவான சொற்களையும் பழக்கங்களையும் அவர்களின் வாழ்வில்க்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

105/1043:திருக்குறள்-நல்குரவு

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. வறுமை தொண்மையான குடிப்பெருமையையும் உடல் வனப்பையும் ஒருங்கே கெடுக்கும்.மனிதர்களுக்கு கஸ்ட துன்பங்கள் ஏற்ப்படும்போது செல்வங்கள் மீது ஆசை ஏற்ப்பட்டால் அதனால் அவர்களின் பெயரையும் குடும்பதின் பெயரையும் சேர்த்து கெடுக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள். 

105/1042:திருக்குறள்-நல்குரவு

இன்மை என ஒரு பாவி மறுமையும் இன்மையும் இன்றி வரும். வறுமை என்ற பாவி எல்லாப் பிறவியிலும் தொடர்ந்து வருவான்.மனிதர்களின் வாழ்வில் என்றும் வறுமை என்ற நிலை எந்த பிறவியிலும் தொடந்து வரக்கூடும் அதனால் நாம்தான் செல்வந்தர்கள் என்று நினைத்து கொண்டு கர்வம் கொள்ளாது வாழ்தல் மனிதர்களின் பண்புக்கு உகந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

105/1041:திருக்குறள்-நல்குரவு

Image
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது.வறுமையை போன்று கொடியது இல்லை அது போன்று கொடியது அதுவே. மனிதர்களின் வாழ்வில் வறுமை என்பது ஒரு கொடியது வறுமையை கண்டு அஞ்சுவதால் மனிதர்கள் மனம் சலித்து போவார்கள் அதே மனிதர்கள் மனம் சலிக்காது வறுமையை எதிர்த்து போராடினால் இந்த உலகில் நல்ல நிலையில் வாழ்வியல் நாடத்தமுடியும் என்பது உண்மை வாழ்வியல் சிந்தனையில் வேலை என்பது மிக அவசிமானது அதுவே வறுமையை ஒழிக்கும் வறுமை வாழ்வில் துன்பம் தரும் அதை விட துன்பம் எதுவில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .