120/1196:தனிப்படர் மிகுதி
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம் காவடி பாரம்போல் இருபக்கம் இருப்பது இன்பம்.ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலையில் காமம் இருப்பதே காமத்துக்கு இன்பமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.