Posts

Showing posts with the label 120/1198:தனிப்படர் மிகுதி திருக்குறள்

120/1198:தனிப்படர் மிகுதி

Image
திருக்குறள்: வீழ்வாரின் இன்சொல் பெறாஅஃது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.  ( குறள்  1198-  அதிகாரம் :  தனிப்படர்மிகுதி ) பொருள்: தான் விரும்பிய காதலரின் இன்சொற்களைப் பெறாமல் பிரிந்து வாழும் மகளிரைப் போல இரக்கமில்லாத கொடிய மனம் படைத்தவர்கள் இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. விரிவாக்கம்: தன் காதலனைப் பிரிந்து வாழும் தலைவி, பிரிவுத் துயரிலும் தன் உயிர் பிரியாமல் இருப்பதை எண்ணித் தன்னையே நொந்து கொள்கிறாள். "தான் நேசித்த காதலரின் அன்பான, இனிமையான சொற்களைக் கேட்க முடியாத சூழலிலும், இன்னும் உயிரைத் தாங்கிக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறார்களே, அவர்களை விட வலிமையான, இரக்கமற்ற மனம் படைத்தவர் வேறு யாரும் இருக்க முடியாது" என்று தன் பிரிவின் ஏக்கம் தாங்காமல் தலைவி நயம்பட எடுத்துரைப்பதாக இக்குறள் அமைகின்றது. English Translation: Thirukkural: Veezhvaarin Insol Peraaadhulagaththu Vaazhvaarin Vankanaar Il. Meaning: There are no hearts more hard and unyielding in this world than those women who continue to live without hearing the sweet words of their beloved. Explanation: The maiden...