Posts

Showing posts with the label 57/568 திருக்குறள் வெருவந்த செய்யாமை

57/568:திருக்குறள்-வெருவந்த செய்யாமை

Image
திருக்குறள்: இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.  ( குறள்  568 -  அதிகாரம் :  கொடுங்கோன்மை ) பொருள்: அமைச்சர்கள் மற்றும் அறிவுடைய சுற்றத்தாரோடு ஆராய்ந்து காரியங்களைச் செய்யாத அரசன், பின் விளைவுகள் வரும்போது தன் கோபத்தின் வழியே சென்று சீறுவானாயின், அவனுடைய செல்வமும் ஆட்சியின் சிறப்பும் சுருங்கி அழிந்துவிடும். விரிவாக்கம்: ஒரு சிறந்த ஆட்சியாளன் எந்தவொரு முக்கிய முடிவையும் தன் சுய விருப்பப்படி மட்டும் எடுக்கக் கூடாது; அனுபவமும் அறிவும் மிக்க அமைச்சர்களுடனும் சுற்றத்தாருடனும் கலந்தாலோசித்து சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற போக்கில் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதனால் வரும் துன்பங்களைக் கண்டு தன் கீழ் உள்ளவர்கள் மீது கோபப்பட்டுச் சீறினால், அவனுடைய அரசபோகமும், நாட்டினுடைய செல்வமும், சிறப்பும் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் அழிந்துபோகும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். English Translation: Thirukkural: Inaththaatri Ennaatha Vaenthan Sinaththaatrich Seerin Sirugum Thiru. Meaning: A king wh...