Posts

Showing posts from December 29, 2019

89/890:உட்பகை திருக்குறள்

Image
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. மனப்பொருத்தம் இல்லாதவருடன் வாழ்தல் ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்தல் போன்றதாகும்.மனதோடு மனம் விரும்பாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வாழ்கையை நடத்துவதென்பது பாம்புடன் வாழ்வதுபோல ஓவ்வொரு செயலிலும் பயந்தே வாழ்வினில் வாழநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

89/889:திருக்குறள்-உட்பகை

Image
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு.உட்பகையானது எள்ளின் பிளவு போல சிறியதாக இருப்பினும் அது தன்னுள் அழிவினை உண்டாக்கும். சிறிய விரோதமாக இருந்தாலும் அது மனிதருக்குள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி அழிவினை உண்டுபண்ண வழியமைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

89/888:திருக்குறள்-உட்பகை

Image
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.அரத்தினால் தேய்க்கப் பெற்ற இரும்பைபோல உட்பகை உள்ள குடி மெல்ல வலிமையிழந்து அழியும். இரும்பை அரத்தினால் தேய்ந்தால் அதன் வடிவத்தை மாற்றும் ஆனால் அதன் பலம் குறையும் அதுபோலவே உள்ளே விரோதமுள்ள குடுப்பங்கள் மெதுவாக அழிந்து இல்லாமல் போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

89/887:திருக்குறள்-உட்பகை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.செப்புக்குடமும் மூடியும் போல சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் சேர்ந்து வாழார். செப்புசொம்பும் அதன் மூடியும் சேர்திருப்பதை போல தெரிந்தாலும் உள்ளே விரோதமுள்ள உறவினர்கள் என்றென்றும் மனமொத்து முழுமகிழ்சியுடன் உறவாடி வாழ்வினில் வாழ்க்கையை நடந்தமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

89/886:திருக்குறள்-உட்பகை

Image
ஒற்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை வற்றல் அரிது. உடனிருப்பவர் ஒன்றாமை ஏற்படுமாயின் ஒரு நாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது.வாழ்வினில் சேர்ந்து இருந்தவர்கள் ஒற்றுமையின்றி விலகி செல்வார்களானால் ஒருபோதும் அழிவுகளில் இருந்து தப்பித்து கொள்ளமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

89/885:திருக்குறள்-உட்பகை

Image
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவுந் தரும். உறவுமுறையில் உட்பகைவந்தால் அது இறங்குமளவுக்கு பல துன்பங்களைக் கொடுக்கும். உறவுகளுக்குள் விரோதம் வந்தால் அதனால் குடுப்பத்துக்குள் இழிவான செயல்களில் குடுப்பதார்கள் இறங்கக்கூடும் அதனால் அந்தந்த குடுப்பங்களுக்குள் துன்ப துயரங்கள் வந்து செருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

89/884:திருக்குறள்-உட்பகை

Image
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவுந்தரும். சிறந்த மனப்பான்மையின்றி உட்பகையிருந்தால் உறவினர் இணையாதபடி பல துன்பங்களைத்தரும். சொந்தகாரர்களின் உள்ளங்களில் சிறந்த சித்தனையற்ற விரோதங்கள் அமைந்தால் சொந்தங்களை உறவாடவிடாதபடி தீமைகளை இணைத்து சொந்தங்களை பிரிக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

89/883:உட்பகை திருக்குறள்

Image
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். உட்பகைக்கு அஞ்சி தன்னைக்காத்துக் கொள்ளவேண்டும் அன்றி , தளர்ச்சியுறும் போது நம்மை மட்கலம் அறுக்குங் கருவிப் போல் அழித்துவிடும். உள்ளே உள்ள விரோதத்துக்கு பயந்து தன்னைக்காத்துக்கொள்ளவேண்டும் இல்லையேல் மந்தமான நிலையை அடையும்போது எதிரிகளால் தொல்லைகள் வந்துசேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

89/882:திருக்குறள்-உட்பகை

Image
வாள்போல் பகைவர் அஞ்சற்க அச்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. வாள் போன்ற கொடிய பகைவர்க்கும் அஞ்சாதே ஆனால் நண்பர்போல் நடித்து தீமைசெய்யும் நட்பிற்கு அஞ்சவேண்டும்.கூர்மான வாள்போல எதிரிகள் வந்தாலும் அவர்களை எதிர்த்து அச்சாமல் போராடலாம் ஆனால் உறவாடி கெடுக்கின்றவர்களை என்றுமே நம்பி உறவாடுதல் வாழ்வினில் தீமைதருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

89/881:திருக்குறள்-உட்பகை

Image
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.நோய்த்தருமாயின் குளிர்ந்த நீரும் தீமையே அதுபோல் உறவினரின் இயல்பும் , கேடுதருமாயின் பகைமையே.மானிடவாழ்வுதனில் பகைமை என்பது வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்றாகும் இயற்கையின் குளிர்ந்தநீர் மனித உடலுக்கு சில வேளைகளில் நோய்தருமாம் அதே போலதான் உறவுகளின் பகைமையும் கேடுதருமாயின் அவர்களை விட்டு விலகி வாழ்வாதே வாழ்வில் சிறப்பாகும் பகமையை வைத்து கொண்டு உறவாடல் சிறந்ததல்ல என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் , பாலாஜி பாலசுப்பிரமணியம்.