Posts

Showing posts from October 26, 2018

36/358:திருக்குறள்-மெய்யுணர்தல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செய்பொருள் காண்பது அறிவு.பிறப்பின் காரணமான அறியாமை நீங்க பிறப்பின் சிறப்பான மெய்ப்பொருள் காண்பது அறிவு.ஏன் பிறந்தோம் என்ற அறிவின்மையை நீங்க செய்து பூமியில் பிறந்ததற்கான சிறந்த பயனின் உண்மை நிலையை அறிவது அறிவாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

36/357:திருக்குறள்-மெய்யுணர்தல்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. ஒருவனுள்ளம் மெய்பொருள் அடைந்துவிட்டால் அவனுக்கு மறுபிறவியில்லை. மனிதர்கள் மனித வாழ்வின் உண்மையான நிலையை அறிந்து விட்டால் அவர்களுக்கு மீண்டும் ஒரு தடவை பூமியில் பிறந்தலுக்கான தேவையிருக்காதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

36/356:திருக்குறள்-மெய்யுணர்தல்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.இப்பிறப்பில் கற்றறிந்த மெய்யறிவு பெற்றவர் மீண்டும் பிறவா பெருநெறியுடையவர்.இந்த பிறப்பிலும் கற்கவேண்டிய வற்றை கற்று தெளிந்து மெய்மையுணர்தவர்கள் மறுபடியும் இந்த பூமியில் பிறவாத வரத்தையே மேற்கொள்வார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

36/355:திருக்குறள்-மெய்யுணர்தல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.ஒரு பொருள் எத்தன்மை உடையதாயினும் அப்பொருளின் உண்மை நிலை காண்பதே அறிவு .எந்த விடயமானாலும் அந்த விடயங்களின் உண்மையான நிலையின் தன்மைகளை அறிந்து கொள்வது அறிவாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

36/354:திருக்குறள்-மெய்யுணர்தல்

ஐயுணர்வு எந்தியக் கண்ணும் மயமின்றே மெய்யுணர்வு இல்லாதவர்க்கு. ஐம்புலன்களடக்கியவர்க்கும் மெய்யறிவு இல்லை யென்றால் அதனால் பயனில்லை. மனிதர்கள் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தாலும் உண்மையான மெய்மை உணர்த்தல் இல்லையென்றால் அந்த. வாழ்வில் பயன் எதுவுமில்லையென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

36/353:திருக்குறள்-மெய்யுணர்தல்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து.அறியாமையகற்றி மெய்ப்பொருளடைந்தார்க்கு இவ்வுலகை விட வீட்டுலகு எளியது.மனிதர்கள் தங்களின் அறியாமையை அகற்றி கடவுளின் திருவடிகளை வணங்கி வாழ்ந்தால் இந்த உலகை விட மேலுலகு இலகுவானதென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

36/352:திருக்குறள்-மெய்யுணர்தல்

இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு.மயக்கம் தெளிந்து மாசற்ற அறிவுடையார்க்கு அவ்வறிவு துன்பம் நீக்கி இன்பம் சேர்க்கும். அறிவில்லாத மயக்கம் தெளித்து உண்மையான அறிவுள்ள மனிதர்களுக்கு துன்பம் இல்லாமல் போய் இன்பமான வாழ்வு வாழ்வினில் வந்து சேருமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .