6/52:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்.இல்லறத்திற்கேற்ற நற்குணங்கள் மனைவியிடம் இல்லாதிருக்குமாயின் அவ்வாழ்க்கை எவ்வளவு சிறப்பினும் பயனில்லை.மனிதர்களின் வாழ்வில் திருமணம் ஒரு பாகமாகும் வாழ்க்கைக்கு ஏற்ற மனைவி அமையவேண்டும் என்பது தமிழ் சபையோரின் நெறி.நற்குணங்கள், நற்சிந்தனையும் அறிந்த மனைவி வாழ்வில் கிடைத்தால் வாழ்வு நெறிப்படும்.அப்படி நெறிப்படவாழ்தாலும்,மேல் குறிப்பிட்ட குணங்கள் அமையாவிடின் இல்லறவாழ்வு சிறப்படையாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.