Posts

Showing posts with the label 17/166 திருக்குறள் அழுக்காறாமை

17/166:திருக்குறள்-அழுக்காறாமை

Image
திருக்குறள்: அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். (குறள் 166 - அதிகாரம்: அழுக்காறாமை) பொருள்: பிறருக்கு ஒன்றைக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவனின் சுற்றமும், உடுப்பதற்கு உடையும் உண்பதற்கு உணவும் இல்லாமல் கெட்டு வருந்தும். விரிவாக்கம்: மனிதர்களின் வாழ்வில் பொறாமை என்பது அழுக்கு நிறைந்த மனமாகும்; மற்ற மனிதர்களின் வாழ்வின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ச்சியடையாமல், பொறாமை கொண்டு அவர்கள் மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்திக் கொள்வதாகும். இப்படியான மனப்போக்கு உள்ள மனிதர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்ய முற்படுகிறபோது அதைத் தடுத்து விட முயற்சிகள் செய்வார்கள். அப்படிப் பிறரின் நன்மையைத் தடுக்கும் மனிதர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும், தங்களின் வாழ்வில் உணவுக்கும் உடைக்கும் கூட வழியின்றி வருந்தி வாழ நேரிடும் என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார். --- English Translation: Thirukkural: Azhukkaruppaan Sutram Uduppadhooum Unbadhooum Indrik Kedum. Meaning: The kin of one who begrudges and hinders gifts to others will perish without even clothing to wear or food to eat. E...