Posts

Showing posts from July 10, 2020

112/1119:நலம் புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் மலர்காணத் தோன்றால் மதி.நிலவே மலர் கண்ணுடையவளைப் போல நீ ஆக விரும்பினால் பலர் காணத் தோன்றாதே. முழுமதி நிலவே பூங்கள் போல கண்களுடைய பெண்ணினை போல நீயும் விளங்க வேண்டுமானால் மனிதர்ளின் கண்களில் தெரியும் படி உலாவித்திரியாதே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

112/1118:நலம் புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.நிலவே என் காதலி முகம்போல் ஒளி விடுவாயானால் நீயும் என் காதலுக்கு உரிமை.நீள் வான் முழுமதியே உன் அழகு பெண்ணின் முகவடிக்கு ஒப்பானதென இருக்குமாயின் உன்னையும் நான் விருப்புவேன் நீயும் என் மனதுக்கு பிடித்த அழகுதான் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

112/1117:நலம் புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்கும் போல மறுவுண்டோ மாதர் முகத்து. நிலவு வளரும் பின் தேயும் . ஆனால் காதலி முகத்தில் அக்குறை உண்டோ? நிலவும் தேய்ந்து வளரும் அதில் உள்ள குறைபாடு கூட இந்த பெண்ணின் அழகிய முகத்தில் இல்லையே இவள் பெண்ணா இந்திரலோக தேவதையா என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1116:நலம் புனைந்துரைத்தல்

மதியும் மடத்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். வானத்தில் சுழன்று திரியும் விண்மீன்கள் இது நிலவு இது மாதர் முகம் என அறியாமல் திகைத்தன. பெண்ணின் முகவடிவுக்கும் நிலவின் அழகிற்கும் வித்தியாசம் தெரியாது வானில் திரியும் விண்மீன்கள் அதிசயமாக பார்க்கின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1115:நலம் புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. அனிச்ச மலரை காம்புடன் சூடிய இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியாது.அந்த பெண்ணுக்குகாக நல்லபறை சாற்றப்படவில்லை அவள் இடுப்புடைந்து வீழ்ந்தாள் அவள் அனிச்சம்பூவை காம்பு நீக்காது சூடியதால் அதன் பலனை அனுபவிக்கவேண்டிய சூழ்நிலையானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1114:நலம் புனைந்துரைத்தல்

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வோம் என்று.குவளைமலர்கள் இவள் கண்ணை நோங்கி நாம் உவமையாக மாட்டோமென்று தலைகுனியும்.பெண்ணின் கண்களை குவளை மலர்கள் பார்க்கமுடிந்தால் இந்த பெண்ணின் கண்பார்வைக்கு என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லையேன தலையை குனியும் மலர்களாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1113:நலம் புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள வட்கு. முங்கில் போன்ற தோளிற்கு தளிர்மேனி , முத்தே பல் மலரே மணம். வேலே கண். அழகான பல்வரிசை அகண்டு விரிந்த தோள் அமைப்பு அம்சமான உடல் கட்டு வாழைத்தண்டுபோல மேனி பூகளைபோல் வாசம் மயங்க வைக்கும் தன்மை சாயம் பூசிய கருவிழிகள் அப்படியான பெண்ணே ஆண் விருப்பும் பெண்ணாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1112:நலம் புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூவொக்கும் என்று. மனமே ! நானோருவன் பார்க்கும் இவள் கண் பலர் பார்க்கும் மலர் போன்றது என மயங்குகிறோயோ? மனிதர்களின் மனம் பூக்களை கண்டு மகிழ்வதுண்டு ஆனால் பெண்ணின் கண்ளை பார்த்தால் பலராலும் கண்டு வியப்படையக்கூடிய கண்களாக இருக்கின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1111:நலம் புனைந்துரைத்தல்

Image
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.நற்பண்புடைய் அனிச்சப்பூவே வாழி ! என் காதலி உன்னைவிட மென்மையானவள்.மனிதர்களால் போற்றப்படும் மென்மையான பூவே அது அனிச்சம் பூதான் அதை விட ஒரு ஆண் காதலிக்கும் பெண் மிக மென்மையானவளென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம் .