Posts

Showing posts from May 27, 2019

59/590:திருக்குறள்-ஒற்றாடல்

Image
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்  படுத்தானாகும் மறை.அரசன் ஒற்றனுக்கு பிறர் அறியாவண்ணம் சிறப்பு செய்யவேண்டும் பிறர் அறியச்செய்தால் இரகசியம் வெளியாகும்.ஒரு உளவாளியின் சிறந்த செயலை பாராட்டி மக்கள் முன்னிலையில் கெளரவப்படுத்தினால் இரகசியமாக வைத்திருக்கும் உளவாளிகளின் செயல்கள் நாட்டு மக்களுக்கு தெரியவந்து விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

59/589:திருக்குறள்-ஒற்றாடல்

Image
ஒற் றொற்றுணராமை  ஆள்க உடன் மூவர் சொல்லதொக்க தேறப்படும். ஒற்றர்களை தனித்து கையாளுதல் வேண்டும்  மூன்றொறர்களை உளவறியச்செய்து ஒப்பிட்டு ஒத்திருக்குமாயின் செய்தி உண்மையென அறிக.ஒரு உளவாளிக்கும் தெரியாத வண்ணம் மூன்று உளவாளிகளை அனுப்பி உளவறியச் செய்து அவர்கள் கொண்டுவரும் உளவு விபரங்களை ஒன்றுசெர்த்து பார்த்து அதில் உண்மைகள் உள்ளனவா சரியான உண்மையான செய்திகள்தானா என் உறுதி செய்து கொளவது பாதுகாப்புக்கு சிறப்பு தருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

59/588:திருக்குறள்-ஒற்றாடல்

Image
ஒற்றொறித்  தந்த பொருளையும் மற்றுமோர் ஒன்றினால் ஒற்றிக் கொளல்.மன்னன் ஒர் ஒற்றின்றிந்து கூறிய செய்தியை மற்றோர் ஒற்றனால் உளவறியச்செய்து ஒப்பிட்டு தெளிவடைய வேண்டும்.அரசாங்க ஆளுனர்கள் ஒரு உளவாளி அறிந்து வரும் உளவு தகவல்களை இன்னுமொரு உளவாளியை வைத்து உண்மையான தகவல்கள்தானா என ஆராய்ந்து அறிந்து தெளிவுபடுத்திக்கொள்வதுதான் பாருகாப்பாக அமையுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

59/587:ஒற்றாடல் திருக்குறள்

Image
மறைந்தவை கேட்கவற்றாகி  அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.மறைவாக நடப்பனவற்றை கேட்டறிந்து அவற்றில் சந்தேகமின்றி ஆராயவல்லவனே ஒற்றன். மனிதர்கள்  சமுதாயத்துக்கு தெரியாமல் செய்கின்ற செயல்களை  சமுதாயத்துடன் சேர்ந்து சமுதாயத்துகே தெரியாமல் அறிந்து கொண்டு அதனை ஆராய்ந்து அதனுள் தெளிவானவற்றை அறிந்து கொள்ளவதே உளவாளியின் திறன் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

59/586:திருக்குறள்-ஒற்றாடல்

Image
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயின்னும் சோர்விலது ஒற்று.துறவியைப்போலும் ஒழுக்கத்தவர் போலும் வேடமிட்டு எங்கும் சென்று ஆராய்ந்தறிந்து அவற்றை எத்துன்பத்திலும் எவ்விடத்திலும் கூறாதவன் ஒற்றன். மிக நல்ல மனிதன் போல வேடம் பூண்டு எல்லா இடங்களுக்கும் சென்று மிக நுட்பமாக தான் அறிந்தவற்றை எந்த விதமான துன்பங்களை தான் அடைந்தாலும் யாரிடத்திலும் சொல்லி மாட்டிக்கொள்ளாதவனே சிறந்த உளவாளி என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

59/585:திருக்குறள்-ஒற்றாடல்

Image
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. அஞ்சா உருவத்தோடு எவர்பார்வைக்கும் அஞ்சாது  எவ்விடத்திலும் தான் அறிந்த உண்மையை வெளியிடாதவன் ஒற்றன்.துணிந்த உடல்கட்டுடன் யாருடைய கண்பார்வைக்கும் பயப்பிடாது துணிந்து எந்த இடத்திலும் தானே ஆராய்ந்த உண்மைகளை வெளியில் சொல்லாதவனே உளவாளி என்பவனே எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

59/584:திருக்குறள்-ஒற்றாடல்

Image
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.அரசு பணி புரிபவரையும் அவர்தம் உறவினரையும் பகை வரையும் ஆராய்ந்து அறியவல்லவன் ஒன்றன்.உளவாளி அரசாங்கத்தில் வேலை செய்பவர்களை அவர்களின் உறவினர்கள்  நன்பர்களையும் எதிரிகளையும் ஆராய்ந்து அறிந்து வைத்திருக்க வல்லவன் உளவாளி என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

59/583:திருக்குறள்-ஒற்றாடல்

Image
ஒற்றனான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடைந்தது இல்.ஒற்றன் மூலம் எங்கு நடப்பனவற்றை அறிந்து ஆராய்ந்து அதன் பயனடையா மன்னன் வெற்றி பெறுவதற்கு வழியில்லை. உளவாளி மூலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்து ஆராய்ந்து  தெரிந்து கொண்டு அதற்கேற்றப்போல் அரசாங்கத்தை நடத்தாத அரசில் ஆளுநர்கள் அரசியலில் வெற்றியடைவது கடினமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

59/582:ஒற்றாடல் திருக்குறள்

Image
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.எவரிடத்தும் எங்கும் நடப்பனவற்றை விரைந்து ஒன்றன் மூலம் அறிவது அரசன். கடமையாகும்.எல்லா இடங்களிலும் நடக்கும் நல்லவற்றையும் தீயவற்றையும் சரியாக நடைபெற்றுகின்ற நாட்டு நடப்புகளை வெகு விரைவாக உளவாளியைக்கொண்டு நாட்டின் அரசாங்கம் அறிந்து கொள்வது சிறந்த அரசாங்கத்துக்கான சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

59/581:ஒற்றாடல் திருக்குறள்

Image
ஒன்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.ஒற்றனையும் அரச நூல்களையும் தன் இரண்டு கண்களாக அரசன் அறிந்து கொள்ளவேண்டும்.உளவாளியையும் அவனின் விசுவாசத்தையும் நேர்மையையும் நன்நம்பிக்கையையும் அரசாங்க நீதி நெறி நூல்களையும் இரண்டு கண்களைப்போல் பாதுகாத்து அறிந்து வைத்திருக்க வேண்டுமென  என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.