Posts

Showing posts with the label 101/1007:நன்றியில் செல்வம் திருக்குறள்

101/1007:திருக்குறள்-நன்றியில் செல்வம்

Image
திருக்குறள்: அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றான் தமியள்மூத் தற்று.  ( குறள்  1007 -  அதிகாரம் :  ஒப்புரவறிதல் ) பொருள்: வறியவர்களுக்கு என்று எதுவும் கொடுத்து உதவாத கையேந்தும் தன்மையற்றவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்ற ஒரு பெண், உரிய காலத்தில் திருமணம் ஆகாமல் தமியளாய் (தனியாக) முதுமை அடைந்தாற் போன்றது ஆகும். விரிவாக்கம்: செல்வம் என்பது பிறருக்குப் பயன்படும் போதுதான் அதற்கு உண்மையான மதிப்பு உண்டாகிறது. தன்மிடம் இருக்கும் பொருளைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும். அவ்வாறு செய்யாமல், தான் மட்டுமே செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு யாருக்கும் உதவாமல் இருக்கும் ஒருவனின் செல்வம் எதற்கும் பயன்படாமல் வீணாகிவிடும். இதனை வள்ளுவர் ஒரு அழகான உவமையால் விளக்குகிறார். மிக்க அழகு வாய்ந்த ஒரு பெண் உரிய வயதில் திருமணம் ஆகாமல், யாருமின்றித் தனித்து முதிர்ந்து வயதாகிப் போனால் அந்த அழகால் எந்தப் பயனும் இல்லையோ, அதைப் போலத்தான் பலருக்கு உதவ வேண்டிய செல்வம் ஒருவனிடம் மட்டும் குவிந்து பயனின்றித் தேங்கி நிற்பதும் என்று இக்குறள் எடுத்துரைக்கிறது. English Translation: Thiru...