Posts

Showing posts from June 20, 2019

63/630:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.துன்பத்தை இன்பமாக கருதுபவன,எதிரியும் விரும்பி மதிக்கும் சிறப்பையடைவான்.துன்பங்களையும் துச்சமாக நினைக்கும் மனிதர்களுக்கு அவர்களின் எதிராளளிகளேலேயே உயர்வாக கூறும் நிலை உருவாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

63/629:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.இன்பம் கண்டு மகிழாதவன், துன்பம் கண்டு கவலை கொள்வதில்லை.இன்பமான நிலை வாழ்வில் வரும்போது அதை ஆடம்பரமான முறையில் கொண்டாடி மகிழ்ச்சியடையாதவர்கள் துன்பங்கள் வரும்போது கவலைப்படுவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

63/628:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.இன்பத்தை விரும்பாது துன்பத்தை இயல்பு என்று கருதுபவனை துன்பம் வந்தடையாது.இன்பமே வாழ்க்கையில் தேவையென்று தேடியலையாமல் வாழும் மனிதர்களுக்கு வாழ்வினில் துன்பங்கள் வந்து சேருவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.   உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

63/627:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.அறிவுடையோர் தன் உடல் துன்பம் என்னும் நோய்க்கு இலக்கு என்றறிந்து துன்பம் கண்டு கலக்கமடையார்.மனித உடலில் வருத்த துன்பங்கள் வருவதுண்டு அது இயல்பானவை அதை நினைத்து வருத்தப்பட்டு வாழ்பவர்கள் புத்திசாலிகளில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

63/626:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
அன்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றதவர்.செல்வம் வந்தபோது மகிழ்ந்து பாதுகாக்கத் தவறியவர் செல்வம் போன போது துயரம் கொள்வாரோ? எவ்வளவோ வசதிகள் வந்தும் அதை பாதுகாத்து பயன் படுத்த தெரியாதவர்கள் அந்த வசதிகள் அனைத்தும் அழிந்து போகும்போது மட்டும் கவலை கொண்டு வருத்தப்படபோகின்றார்களா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

63/625:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட்படும்.துன்பம் மேலும் மேலும் வந்தாலும் தன் முயற்சியை  விடாதவரை அடைந்த துன்பம் துன்பப்படும்.துன்பங்களும் துயரங்களும் வந்த போதும் அதைக்கண்டு அஞ்சாத மனிதர்களை விட்டு துன்பமே நீங்கி விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

63/624:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.கடினப்பதையில் செல்லும் வண்டியை இழுக்கும் காளையைப் போன்றவரை அடைந்த துன்பம் தானே துன்பப்படும். கடுமையான வாழ்க்கை பயணமாக இருந்தாலும் அந்த வாழ்கையை பள்ளம் திட்டியான பாதையில் காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு முன்னேறி செல்வது போல வாழ்வினை கடந்து சென்றே வாழ்வின் கஸ்டமான பக்கங்களை அனுபவித்து செல்லவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை  நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

63/623:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பைபடாதாவர் .துண்பத்தைக் கண்டு துன்ப்படாதவர் துன்பத்திற்கு துன்பமே செய்வார்.துன்பங்கள் வந்து சேர்ந்த போதும் அதை கண்டு பயப்பிடாதவர்கள் துன்பத்தில் ஆழ்ந்து அதிலிருந்து அதனை வெற்றி கொண்டு வாழ்வினை சிறப்பாக வாழமுயல்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

63/622:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக்கெடும் . பெரும் வெள்ளம் போல் துன்பம் வந்தாலும் அறிவுடையோன் மனதில் நினைத்தளவில் ஒழிந்துவிடும்.மனிதர்களின் வாழ்வில் அளவற்ற துன்பங்கள் வந்தாலும் அறிவுள்ள மனிதர்களின் மனதில் நினைக்கும் பொழுதில் அது மறைந்துவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் .  அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

63/621:திருக்குறள்-இடுக்கண் அழியாமை

Image
இடுக்ககண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் மனதுக்குள் மகிழ வேண்டும் அத்துன்பத்தைக் கடக்கவேறு வழியில்லை.மனிதர்களின் வாழ்வில் துன்பம் என்பது ஒரு பாகம் அதனை கடந்து செல்வேண்டுமானால் வாழ்விலும் மனதிலும் மகிழ்சி என்னும் சிந்தனையை வாழ்வியல் சிந்தனையாக்கவேண்டும் துன்பம் வந்த வேளையை கடந்து செல்ல வேறு வழியில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .