Posts

Showing posts from August 27, 2020

116/1160:பிரிவாற்றாமை

அரிதாற்றி அல்லலநோய் நீங்கிப் பிரிவாற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்.பிரிவைத் தாங்கி துன்பம் தவிர்த்து அவருக்குப் பின்னும் இருப்பார் பலர். காதலித்த ஆணும் பெண்ணும் பிரிந்துசெல்ல விரும்பி பிரிந்து சென்று வாழ்ந்தாலும் காதலின் பிரிவை துன்பத்துடன் ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்ற பின்னும் காதலை நினைத்துக்கொண்டே வாழ்வை வாழ்ந்து முடிப்பவர்கள் பலர் இந்த உலகில் வாழ்வதாக எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

116/1159:பிரிவாற்றாமை

தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடல் ஆற்றுமோ தீ. தொட்டால் சுடுகின்ற தீ காமசுரம் போல விட்டாலும் சுடுமோ? காதலிக்கும் ஆணும் பெண்ணும் பார்த்து கொள்ளாமலே இரு உடலும் சுடாகும் அப்படியான தன்மை நெருப்புக்கேயில்லை நெருப்பு தொட்டால்தான் சுடுவதுண்டு ஆனால் காதலர்கள் பிரிந்தாலே சுடுகின்றதே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

116/1158:பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. உறவற்றார் ஊரில் வாழ்தல் துன்பம் காதலரைப் பிரிந்தால் அதைவிட துன்பம். சொந்தங்களும் உறவுகளும் இல்லாத ஊரில் குடியிருப்பது சந்தோஷமற்ற வாழ்க்கை அதைவிட கவலையான வாழ்க்கை காதலித்தவர்களை அல்லது விருப்பியவர்களை பிரிந்து வாழுதுதல் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

116/1157:பிரிவாற்றாமை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறைவா நின்ற வளை.தலைவன் பிரிவை கைமெலிந்து மணிக்கட்டிலிருக்கும் வளையல்கள் வெளிப்படுத்தவில்லையா? மனைவியை விட்டு கனவன் பிரிந்து சென்றிருந்தால் கனவனின் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தால் உடல் மெலிந்து கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கையை விட்டு கழற்று சமுகத்துக்கு காட்டிக்கொடுத்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

116/1156:பிரிவாற்றாமை

பிரிவுரைக்கு வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. பிரிவு பற்றி பேசும் துணிவுடையவர் திரும்பி வந்து அருளுவார் என்பது தவறு.விலகிப்போகலாம் என நினைத்து மனத்துணிவுடன் பிரிய விரும்புபவர் மீண்டும் திரும்பி வந்து வாழ்க்கையை நடத்துவார் என்று நினைப்பது நம்பதகுந்ததல்ல என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.

116/1155:பிரிவாற்றாமை

ஒம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. தடுத்தால் புறப்படுவார் பிரிவை தடுக்க அவர் பிரிந்தால் நான் எவ்வாறு கூடுவது? பெண் விரும்பிய ஆணை தன்வசமாக்கி நிறுத்தி வைக்க எண்ணினால் ஆண் போகத்தான் விருப்புவார் அந்த பிரிவினை தடுத்து நிறுத்தியும் பிரிந்து போனால் எப்படி மீண்டும் சேருவதென ? எடுத்துரைக்கின்றது திருக்குறள். 

116/1154:பிரிவாற்றாமை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. கட்டியணைத்து கலங்காதே என்றவர் பிரிந்தால் உறுதிச் சொல்லை நம்பியவர் மேல் தவறு உண்டோ? ஆண் பெண்ணை கட்டிப்பிடித்து எதற்கும் கலங்காதே உன்னை விட்டு பிரிந்து செல்லமாட்டேன் என்று அளித்த வாக்குறிதியை மீறி அந்த ஆண் செல்வாரானால் அந்த ஆண் சொன்னதை நம்பியது பெண்ணின் குற்றமாகுமா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.