Posts

Showing posts from October 7, 2019

80/800:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.நல்லோர் நட்பை தேடி அடைக தீயோர் நட்பை ஏதாவது கொடுத்தாவது விடுக. நல்லவர்களின் நட்பை தேடிதேடி நட்புக்கொள்ளவேண்டும் தீயவர்களின் நட்பை திரவியங்களை கொடுத்தாவது பிரிந்து விடவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

80/799:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.துன்ப காலத்தில் தன்னை விட்டு விலகுபவர் நட்பானது சாகும்போது நினைத்தாலும் மனம் வருந்தும்.மனித வாழ்வில் துன்பங்கள் நிகழ்வதுண்டு உங்கள் உற்றார் உறவினர் நன்பர்களுக்கும் எனைய சமுகத்தாருக்கும் அத்துன்பம் நிகழ்ந்தால் துன்பத்தில் உதவி செய்யுங்கள் அப்படி உதவி செய்யாமல் விலகிசெல்பவர்கள் நட்பானது இறக்கும் போது நினைத்தாலும் மக்களின் மனம்வருந்த தக்கதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்

80/798:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.உள்ளம் சிறுக்கும் சிறிய எண்ணங்களை எண்ணாதே துன்பத்தில் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதே.மனிதர்களே உங்கள் வாழ்வில் உங்கள் உள்ளம் சிறுக்கும் வண்ணம் நடந்து கொள்ளாதீர்கள் என்றும் துன்பத்தில் இருப்போரை கைவிடுகின்ற நட்பை நட்பாக ஏற்றுக்கொள்ளதீர்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கும்போது கைகொடுக்காத நட்பு நல்ல நட்பாக இருக்கமுடியாது என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

80/797:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.ஒருவன் ஊதியம் என்பது என்ன என்றால் அறிவில்லார் நட்பை நீக்கிவிடுதலே.மானிடகளின் வாழ்வுதனில் மனிதர்கள் எடுத்துத்துரைக்கின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு அதேபோல உதிர்கின்ற வார்த்தைகளுக்கு மனிதகுலத்தில் மதிப்புமுண்டு அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு தெரியாதவர்களை அறிவில்லாதார் எனவும் அவர்களின் நட்பை விலக்கிவைப்பதே மக்கள் வாழ்வுக்கு சிறந்தது என எடுத்துரைக்கிறது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம்.

80/796:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.துன்பக் காலத்திலும் ஒர் நன்மை உண்டு அது நண்பர்களின் தன்மையை அளக்கும் அளவுகோலாகும்.கேடுகள் வந்தாலும் அதுவும் நன்மைக்குத்தான் ஏன்னென்றால் அப்போதுதான் நண்பர்களின் முழுமையான தன்மைகளை எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கித்தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

80/795:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
அழச்சொல்லி அல்லது இடிந்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.தாம் தவறு செய்யும்போது வருந்தும்படி செய்து இடித்துரக்க வல்லவரை ஆய்ந்து நட்பு கொள்ளவேண்டும்.மக்கள் ஆகிய நீங்கள் தவறு செய்யும்போது மனம்வருந்தும்படி இருந்தாலும் எடுத்துரைக்ககூடிய நல்லவர்களையும் வல்லவர்களையும் புத்திகூர்மையானவர்களையும் ஆராய்ந்து நட்பு கொள்ளவேண்டும் என எடுத்துரைக்கிறது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும்.விரிவாக்கமும் எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

80/794:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.நல்ல குடியில் பிறந்து பழிக்கு அஞ்சுகின்றவனை அவனுக்கு தேவையானதை கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.மனிதர்களே உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கின்ற மனிதர்கள் நல்லகுடியில் பிறந்திருந்தால் அவர்கள் என்றும் பழி பாவங்களுக்கு அஞ்சுவார்கள் அப்படியான மனிதர்களை கோடி குடுத்தும் கூடி வாழ உங்கள் வாழ்வில் இனைத்துக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்பாலாஜி பாலசுப்பிரமணியம்.

80/793:நட்பாராய்தல் திருக்குறள்

Image
குண்னும் குடிமையும் குற்றமும் குன்றா இன்னும் அறிந்தயாக்க நட்பு.ஒருவனுடைய குணம் நற்குடிபிறப்பு குற்றம் கூட்டு உறவையும் ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.இந்த உலகில் மனிதர்களே உங்கள் வாழ்வுதனில் நற்குணங்களையும் நற்குடி பிறப்பின் என்றும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற நற்குடிகளை உறவுகொள்வதே நட்புக்கு இலக்கணம் குற்றம் குறையற்ற கூட்டு உறவுகளை தெரிந்து கொண்டே நட்புக்கொள்ளவேண்டும் அதுவே உங்கள் வாழ்வினில் சிறப்பளிக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .

80/792:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
ஆய்ந்தாய்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும். பல வகையிலும் ஆராய்ந்து நட்பு கொள்ளாதவனுக்கு அந்தநட்பு முடிவில் சாகும் துன்பத்தைத்தரும்.இந்த உலகில் மனிதர்களே நீங்கள் நட்பு கொள்ளமுதல் நல்ல நட்பாக அமையுமா என்று தெரிவு செய்து நட்பை நாடுங்கள் நீங்கள் கொள்ளும் நட்பு நல்ல நட்பாகவிடின் அந்த உறவால் இறக்கும் வரை துன்பத்திலும் துயரத்திலும் உங்கள் வாழ்வை கழிக்கவேண்டி வருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .

80/791:திருக்குறள்-நட்பாராய்தல்

Image
நாடாது நட்டலிற் நட்பின் வீடில்லை நட்பாள்பவர்க்கு.அன்புடன் பழகுவார்க்கு நட்பு செய்தபின் விடுதல் முடியாது ஆதலால் நட்பு செய்வதை விட கேடில்லை.நன்றாக தெரிந்து கொள்ளாது கூடாத நட்புறவு கொண்டால் அதனால் தீமைகள் வந்து சேரும் அதில் இருந்து என்றுமே விடுபடமுடியாமல் போகும் அத்துடன் கேடுதகளும் வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.