Posts

Showing posts from February 7, 2020

97/970:திருக்குறள்-மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.மானக்கேடு வந்தபோது உயிரிழக்கும் மாண்புடையவரின் புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும்.மானமே அழிந்துபோனது இனி எதற்கு இந்த உலகில் வாழ்க்கையென்று உயிரையிழக்கும் மானமுடையவர்களின் புகழ் என்றென்றும் இந்த உலகில் நிலைத்து நிற்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/969:திருக்குறள்-மானம்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.மயிர் நீங்கின் உயிரிழக்கும் கவரிமான் போன்றவர் மானம் போவதாயின் உயிரிழப்பார்.ஆண் அன்னப்பறவையின் மயிர்கள் உதிர்ந்தால் கவரிமா இறந்துபோவதுபோல கவரிமாவைபோல் வாழ்ந்த மனிதர்கள் தங்களின் மானத்தை இழக்கும்போது வெட்கத்தால் மனம்வருந்தி உயிரிழப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/968:திருக்குறள்-மானம்

மருந்தோமற்று ஊன்ஓப்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து.உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில் உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா? உயர்ந்த நலமில்லாமல் மானம் மரியாதையிழந்து நிலையிலும் உடம்பை வளர்த்துக்கொள்ளவேண்டுமா? அதுவே உடலின் உயிருக்கு மருந்துபோலாகுமா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/967:திருக்குறள்-மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.பகவர் பின் சென்று வாழ்வதை விட மானத்துடன் தன்னிலையிருந்து இறப்பது மேல்.இந்த உலகின் மனித வாழ்க்கையில் தீயவர்களின் வழி நடத்தலில் வாழ்வதை விட தன்னிலையிருந்து சிறப்பாக வாழ்ந்து இறந்துபோவதே மேலேன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/966:திருக்குறள்-மானம்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை.அவதிப்பார் பின் மானம் விட்டு நிற்பதால் என்ன பயன் ? புகழும் வாராது மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.மதிக்காதவர்கள் பின்னால் மானத்தை விட்டு ஏன் உறவு கொள்ளவேண்டும் அதனால் என்ன பயன் வரப்போகின்றது புகழும் அடையமுடியாது அதனால் செர்க்கத்தையும் பார்க்கபோவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/965:திருக்குறள்-மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். ஒருகுண்டுமணியளவு இழிவான செயலை செய்தாலும் மலை போன்ற பெருமையுடையவரும் தாழ்வார் .சிறிதளவான கீழ்த்தனமான செயல்களை செய்தாலும் அதை பெருமையாக்கி பெருமையடைத்தாலும் மானத்தால் சமுதாயத்தில் தாழ்த்தப்படுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/964:திருக்குறள்-மானம்

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப்போல் இழக்கப்படுவர்.உயர்ந்த பண்பிலிருந்து மனிதர்கள் கீழ் இறங்க வேண்டிய நிலை வாழ்வியல் வரும்போது உதிர்ந்து வீழ்ந்த தலைமுடியைப்போல் சமுதாயத்தில் வாழ்ந்த வாழ்வினை இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/963:திருக்குறள்-மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. செல்வம் பெருகும்போது அடக்கம் வேண்டும் செல்வம் குறையும்போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.மனிதர்களின் வாழ்வில் செல்வம் பெருகுவது உண்டு அப்படி செல்வந்தர்களாக வாழ்வில் வாழ நேர்ந்தால் அடக்கம் வேண்டும் செல்வம் செழித்து கிடத்தால் நான் என்ற அகந்தை கூடாது அதேபோல் அச்செல்வம் குறைகுன்றபோது இழிவு இல்லாத வாழ்வும் பெருமிதம் கொண்ட போக்கும் தாழ்ந்து விட்டுக்கொடுக்காத தன்மையையும் சமுதாயத்தில் கொண்டிருக்க வேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் திருமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

97/962:திருக்குறள்-மானம்

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டும் பவர்.புகழோடு மானமும் வேண்டுபவர் புகழில்லா இழிவான செயல் செய்யார்.மனிதர்களின் வாழ்வில் புகழ்தேடுவதும் புகழைத்தேடி பல புரட்சிகரமான விடயங்களில் ஈடுபடுவதும் மனிதர்களின் வாழ்நாளை பயன்படுகின்றனர் இப்படி பயன்படுத்துகின்றவர்கள் சீரினும் சிறந்தவற்றையே செய்தல் வேண்டும் குலத்தின் மானமும் வேண்டுபவர்கள் புகழில்லா இழிவான செயல்களை என்றும் சமுதாயத்தில் செய்யமாட்டார்கள் .புத்தியுள்ள மனிதர்கள் இந்த உலகத்தை ஒத்தே வாழ்கை நாடத்துவார்கள் தன்னையும் தன் சமுதாயத்தையும் நல்வழியில் நடத்திச்சென்றே பேரையும் புகழையும் அடையமுடியும் அத்திறன் இல்லாதார் வாழ்வில் தோல்வியையே சந்திக்கநேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

97/961:திருக்குறள்-மானம்

Image
இன்றி யமையாச் சிறப்பின் ஆயினும் குன்ற வருவ விடல்.இன்றியமையதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப்பெருமைக்குக் குறைவானவற்றை செய்லாகாது.மனிதர்களின் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பது வாழ்வின் நெறியாகும் அத்தகைய வாழ்வு அமையாத போது குடிப்பெருமைக்கு கேடுவரும்படியான செயல்களை செய்யலாகாது என்பது வாழ்வின் இலக்கணமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

96/960:திருக்குறள்-குடிமை

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் கலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.புகழ் போன்ற நன்மை வேண்டின் தீயது செய்ய அஞ்சவேண்டும் குலப்பெருமை வேண்டும் எவருக்கும் பணிந்து செல்ல வேண்டும்.மானிதர்கள் புகழ் வாழ்வில் வாழ்திட வேண்டுமென்றால் திமைகளை தவிர்தல் வேண்டும் தீமைகளை புரியாது நல்லொழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முற்படவேண்டும் இனத்தின் புகழையும் பெருமையையும் பழிச்சொல் வாராது காத்தல் வேண்டும் எம்மினத்திற்கு நல்லவை நடக்குமாயின் இந்த உலகிற்க்கு பணிந்து செல்லவேதே சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/959:திருக்குறள்-குடிமை

Image
959:நிலத்தில் கிடந்தமை கால்கட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.எப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்த்தார்களென்று உடலமைப்பு காட்டிக்கொடுத்துவிடும் அதேபோல் குலத்தின் இயல்புகளை அவர்களின் வாய்பேச்சே ஊருக்கு பறைசாற்றிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/958:திருக்குறள்-குடிமை

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின் கண் ஐயப் படும்.குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின் அவன் குலப்பிறப்பை பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.உயர்குடியில் வாழ்த்து வந்திருந்தாலும் உயர்ந்தவர்ளாக இருப்பினும் வாழ்கின்ற குடுபத்துடன் அன்பு பாசம் என்ற நிலை காணப்படவிட்டால் அவர்கள் பிறந்த குலத்தை பற்றி ஊராரும் உலகத்தாரும் பயப்பிடவே செய்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/957:திருக்குறள்-குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.விண்நிலவு களங்கம்போல் உயர்குடிபிறந்தார் குற்றம் ஊருக்கு தெரிந்துவிடும்.விண் நிலவில் குறையிருந்தால் உலகிற்கே தெரிவதுபோல நல்லகுடியில் பிறந்தவர்கள் குற்றம் செய்யும்போது அது ஊருக்கே தெரியவருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.