Posts

Showing posts with the label 69/683 தூது திருக்குறள்

69/683:திருக்குறள்-தூது

Image
நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.பகையரசர்முன் வெற்றித்தூது செல்பவன் அரசநீதி கற்றவருள் கற்றவான விளங்க வேண்டும்.எதிரிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த செல்லும் தூதுவர்கள் பல நூல்களை படித்தறிந்தவர்களாகவும்  பல மொழிகளில் தேர்ச்சி உள்ளவர்களாகவும் அரசியல் படித்தவர்களாகவும் இருப்பதே அந்த நாட்டுக்கும் தூதுவர்களுக்கும் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.