Posts

Showing posts from October 19, 2019

81/810:திருக்குறள்-பழமை

Image
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தவர்.பழைய நட்பரிடத்து வைத்த அன்பினை விடாதவர் பகைவராலும் பாராட்டப்படுவர்.பாரிய நண்பரின் நட்புறவை விடாதவரை எதிரியாலும் புகழப்படுவாரென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

81/809:திருக்குறள்-பழமை

Image
கெடாஅ வழிவந்த பேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.பிரிவில்லாத பழைமையாய் வந்த நண்பரது நட்பினை உயர்ந்தோர் விரும்புவர்.நீண்டநாட்களாக பிரிவின்றி தொடர்ந்து வந்த நண்பர்களின் நட்பினை உயர்வாக கருதுவார்கள் சிறந்த நட்பாளார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

81/808:திருக்குறள்-பழமை

Image
கேளிழுக்கம் கேளாக் கெழும்தகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.நண்பர் தவற்றை பிறர் சொன்னாலும் கேளாது பழமை பாராட்டுவதற்கு நண்பர் பிழை செய்தாராயின் அந்தநாள் நன்னாளாகும். மற்றவர்கள் எங்களின் நண்பர்களை பற்றி குறைகள் குற்றங்கள் கூறியபோதும் நாங்கள் அந்த நட்புறவை நீடித்தபோதும் என்றோ ஒரு நாள் எங்கள் நண்பர்கள் எங்களுக்கே தவறான செயல்களை செய்யும் போதே அவர்களின் தவறுகள் வெளிவரும் நாளே சிறந்த நாளாக கருத்ப்படுமென திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

81/807:திருக்குறள் பழமை

Image
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மையவர். பலநாள் நட்பபுடையவர் நண்பர் தமக்கு கெடுதி செய்தாலும் அவர் பாலுள்ள அன்பு நீங்காதிருப்பர்.நீண்ட காலமாக நட்புடையவர்கள் ஒருவருக்கொருவர் தீமைகளைப்புரிந்தாலும் ஒருவருக்கொருவர் மீதுள்ள அன்பை குறைத்துக்கொண்டு வாழவிரும்ப மாட்டார்கள் அதுவே அவர்களின் ஆழமான நட்புக்கு இலக்கணமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

81/806:திருக்குறள்-பழமை

Image
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.நட்பின் வரம்பினுள் நிற்பவர் பழமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் துன்ப காலம் வந்தபோதும் விடார்.நட்பின் இலக்கணம் தெரிந்தவர்கள் நண்பர்களால் துன்ப துயரங்கள் வந்த போதிலும் அவர்களின் நட்பை விட்டு விலகிச்செல்லமாட்டார்களென திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

81/805:திருக்குறள்-பழமை

Image
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நாட்டார் செயின் . வெறுக்கத் தக்கவற்றை நண்பர் செய்தால் அறியாமையினாலோ அல்லது உரிமையினாலோ செய்ததாக கொள்க.மித்திரர்கள் உங்கள் வாழ்வினில் நீங்கள் வெறுக்கூடிய விடயங்களை செய்தால் அது அவர்கள் அறிவுக்கு எட்டதாதல்தான் அப்படி செய்துள்ளார்கள் அல்லது உங்கள் மேல் விருப்பத்தால் என்று எடுத்துக்கொள்ளுங்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந் த உலகிற்கு .

81/804:திருக்குறள்-பழமை

Image
விழைதகையான் வேண்டியிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.நண்பர் உரிமையாக நம் அனுமதியின்றி செய்தால் அது விரும்பத்தக்கதாக இருப்பின் அறிஞர் மகிழ்ந்தேற்பர்.மித்திரர்கள் உரிமையோடு எங்களின் விருபமின்றி உதவி செய்யும் போது அது என்றும் விரும்பதக்கதே இச்செயலை அறிஞர்கள் பெரியார்களும் சமுதாயமும் விரும்புவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

81/803:திருக்குறள்-பழமை

Image
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. உரிமை செய்பவற்றை அவ்வண்ணமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பழக்கமான அன்பு என்ன நன்மையை செய்யவல்லது.உரிமையோடு உதவுகின்ற உதவிகளை நண்பர்களுக்கு செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளவிட்டால் நீண்டகால நட்பின் பயன்தான் என்னவாகும் என க்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

81/802:திருக்குறள்-பழமை

Image
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.நட்பிற்கு இலக்கணம் உரிமை பாராட்டுவதே அதற்கு இயைந்து மகிழ்ந்திருத்தல் பண்பாளர் நட்பு.நல்ல நட்புக்கு சிறப்பே உரிமையாக நடந்துகொண்டு நட்பர்களின் செயல்களை ஊக்கிவித்து மகிழ்ச்சியடைந்தால் அதுவே சிறந்த நட்பாளர்களுக்கான தனிச்சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

81/801:திருக்குறள்-பழமை

Image
81/801: பழைமை எனப்படுவது யாதனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை எனப்படுவது யாத்தென்றால் நண்பர் உரிமையோடு செய்வனவற்றை பொறுப்பது நட்பாகும்.சிறந்த நட்பு என்பது நண்பர்கள் உரிமையோடு செய்கின்ற செயல்களை நல்ல மனதோடு ஏற்றுக்கொள்வதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.