Posts

Showing posts from October 3, 2019

79/790:நட்பு திருக்குறள்

Image
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.எமக்கு இவர் இப்படிப்பட்டவர் யாம் இவர்க்கு இத்தன்மையுடையவர் என்றும் ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசினாலும் நட்பு சிறுமைப்படும்.நல்ல நண்பர்கள் தங்களுக்குள் இவர்கள் அப்படிப்பட்டவர்கள் இவர்களுக்கு இப்படியான பழக்கவழக்கங்கள் இருக்கின்றன என்று ஒருவருக்கொருவர் பெருமையாக பேசிக்கொண்டால் அதுவே நட்புகள் சிதைத்து போக காரணமாக அமையுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/789:திருக்குறள்-நட்பு

Image
நற்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.எக்காலத்தும் மாறுபடாமல் தளராமல் நண்பனை தாங்குவதே நட்பிற்கு அரசிருக்கையாகும்.எந்தகாலத்திலும் மாறுபடாத நட்பே சிறந்த நட்பாகும் அதனால் மித்திரர்களின் நட்பை மனம் கோணாமல் சிறப்பாக நடத்திசெல்வதே உண்மையான நட்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

79/788:திருக்குறள்-நட்பு

Image
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.ஆடை குலைந்த பொழுது அதை சரிசெய்ய கைவிரைவது போல் நண்பர்களுக்குள் துன்பம் வரும்போது அவற்றை விரைந்து தடுக்கவேண்டும்.உடலில் அணித்திருக்கும் உடைகள் உடலை விட்டு நழுவும்போது கைகள் தானாக சென்று அதை திருத்துவது போல மித்திரர்களுக்குள் துன்ப துயரங்கள் வரும்போது தாமதமின்றி உதவி செய்யும் நோக்கத்தோடு தடுத்து நிறுத்தி சரியான வரியில் செல்ல உதவிசெய்யவேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/787:திருக்குறள்-நட்பு

Image
அழிவின வைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.நண்பனுக்கு கெடுதிகள் வரும்போது அவற்றை நீக்கி அவனை நல்வழியில் செலுத்துவதே நட்பாகும்.மித்திரர்களுக்கு கேடுகள் வரும்காலத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளை புரிந்து சிறந்த வழியமைத்துக்கொடுத்து சிறப்பாக வாழவைப்பதே சிறந்த நட்புகான இலக்கணமாகுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/786:திருக்குறள் -நட்பு

Image
முகநக நடப்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.கண்டவிடத்து முகம் மலரும் படி நட்பு கொள்வது நட்பாகாது அன்பால் உள்ளம் மலரும்படி நட்பு கொள்வதே நட்பு.காணும் போதெல்லாம் முகத்துகாக சிரித்து முகத்தை மலர்ந்து காட்டுவது சிறந்த நட்பல்ல இதயத்தால் உண்மையாகவே அன்பு கொண்டு கொள்ளும் நட்புறவே சிறந்த நட்புறவாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/785:திருக்குறள்-நட்பு

Image
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் .நட்பு செய்வதற்கு குலம் நெடுநாள் தொடர்பு வேண்டியதில்லை உணர்ச்சி ஒத்திருந்தாலே போதும்.மனிதர்களிடையே நட்புறவு கொள்வதற்கு முன்கூட்டியே அவர்களை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை அவர்களின் மனங்கள் ஒத்துபோனாலே போதுமானது நட்புறவாகிவிடலாமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/784:திருக்குறள்-நட்பு

Image
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. நட்பு என்பது சிரித்து விளையாடுவதற்கு மட்டுமன்று தவறுசெய்யும் போது அதனைக் கண்டிப்பதேயாகும். நட்புறவு என்பது உறவாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல உறவாடிய நண்பர்கள் வழிதவறி செல்லும்போது புத்திமதிகளை கூறி அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதேயாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

79/783:திருக்குறள்-நட்பு

Image
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடைய்யாளர் தொடர்பு.படிக்க படிக்க நல்ல நூலின் பொருள் மிகுந்து விளங்குவது போல நல்லோர் நட்பு பழக பழக இனிமையளிக்கும்.சிறந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க இனிமையாகுவும் இருக்கும் அதேபோல அறிவையும் ஊட்டும் அதேமாதிரிதான் சிறந்த பண்பாளர்களிடம் நட்புறவு கொண்டு பழகி வருவதால் வாழ்வினில் இனிமைதாருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

79/782:திருக்குறள்-நட்பு

Image
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்நீர பேதையார் நட்பு.நல்லோர் நட்பு வளர்பிறைத் திங்களின் தன்மையுடையது அறிவிலார் நட்பு தேய்பிறையின் தன்மையுடையது.அறிவுடையார் நட்புறவு நல்லறிவை வளர்க்கவல்லது.அறிவுள்ளவர்களுடன் நட்புறவு கொள்வது வாழ்கையை உயர்த்தி செல்லும் அறிவிலார் நட்புறவு வாழ்வினில் தேய்பிறை போன்றது அறிவில்லாதவர்கள் போல வாழநேரிடும் அத்துடன் வாழ்வை சிறந்த வழியில் இட்டு செல்லாது என்பதே வாழ்வின் வாழ்கை நெறியாகும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவத ு நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

79/781:திருக்குறள்-நட்பு

Image
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.அன்பைப் போல பெற்றுக் கொள்ள சிறந்தவை எவை உள்ளன? அதுபோல எதிரிகள் செயலைத் தடுக்க பாதுகாப்புகள் எவை இருக்கின்றன.மனிதர்கள் நட்புறவில் ஈடுபடுவது சிறந்த செயலாகும் அன்பைபோல் சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லை அதேமாதிரி பகைவர்களின் கூடாத செயல்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்புகளை எற்படும்துவது எதுவாக இருக்குமென்று நினைப்பது என .எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.