119/1187:பசப்புறு பருவரல்
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.தழுவி இருந்த நான் சிறிது தள்ளிப்படுத்தேன் அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது. சேர்ந்து படுத்திருந்ததில் இருந்து விலகிப்படுத்தபோது ஆசை அங்கே நிறைந்து வழிந்து இருந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.