49/488:திருக்குறள்-காலம் அறிதல்
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. பகைவரைக் காணும் பொழுது பணிதல் நன்மை காலம் வரும்பொழுது அவரை கவிழ்த்தல் எளிது.இந்த உலகத்தின் மனித வாழ்க்கைக்குள் பகைவர்கள் வரக்கூடும் அப்படி பகைவர்களை காணும்பொழுது அவர்களிடத்தில் பணித்து செல்லுதல் வாழ்க்கைக்கு நல்லதே வேறு நல்ல நேரம் அமையும்போது சந்தர்ப்பம் பார்த்து அவர்களை கவிழ்த்து விடுவதே எளிதாகும்.களத்தில் கூட களநிலை எங்கள் படைக்கு சார்பற்றபோது களத்தை விட்டு படைகளை பின்வாங்கிகொண்டு வெளியேறி இன்னொரு படைப்பலம் குறைந்த நேரத்தில் எதிர்படைகளை வெற்றி கொள்வதே யுத்த தந்திரமென எடுத்துரைக்கின்றது திருகுறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.