Posts

Showing posts from March 23, 2019

53/528:திருக்குறள்-சுற்றந்தழால்

பொதுநோக்கான்  வேந்தன் வரிசையாக நோக்கின் அதுநோங்கி வாழ்வார் பலர்.அரசன் எல்லோரையும் ஒரே தன்மையாக பாராமல்  தகுதிக்கேற்ப பார்ப்பின் அச்சிறப்பு நோக்கி சுற்றாத்தார்  அவனை விலகாது வாழ்வர்.அரசாங்கம் மக்களுக்கான தகுதியை  அறிந்து தகுதிக்கேற்றவாறு மக்களை நடத்தினால் அதுவே இந்த உலகில் மிக சிறந்த அரசாகும்  அப்படிப்பட்ட ஒரு அரசின் கீழ் மக்கள் சுற்றம் சூழ்ந்து வாழ்வினை வாழவேண்டும் என்றும் விருப்புவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

53/527:திருக்குறள்-சுற்றந்தழால்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீராக்கே உள.இரையைக்கண்ட காக்கை தன் இனத்தை அழைத்து உண்பது போன்ற குணமுடையவர்க்கு சுற்றத்தால் அடையும் செல்வங்கள் பல.உணவை கண்ட காக்கைகள் தங்களின் இனத்தை அழைத்து உண்டு மகிழ்வது போல குணங்களுடைய மனிதர்களுக்கு சுற்றத்தால் வந்து சேரும் செல்வந்தங்கள் பல கோடியென  எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

53/526:திருக்குறள்-சுற்றந்தழால்

பெருங்கொடையான்  பேணான் வெகுளி அவனின் மருங்குடையார்  மாநிலத்து இல். ஒருவன் கொடுத்துதவும் தன்மை மிகுந்தவராகவும் கோபம் அற்றவனாகவும் இருப்பானானின் அவனைப் போன்றச் சுற்றமுடையவர் உலகிலில்லை .பெரிதாக கொடுத்து உதவி செய்யும் தன்மையுடையவனாகவும் சினமற்று மக்களை நேசிக்கும் குணமுடையவனாக இருத்தால் அவனைப்போல் நல்ல மனிதர் இந்த உலகத்தில் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.