Posts

Showing posts from October 1, 2018

29/290:திருக்குறள்-கள்ளாமை

கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு.களவு செய்பவர் விரைவில் அழிந்து இறப்பார் களவு செய்யாதவர் இறந்தும் வானுலகம் எய்துவர்.தீய செயல்களை செய்து வாழுபவர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் நற்செயல்களை புரிந்து வாழுகின்றவர்களது உயிர் பிரிந்தாலும் அவர்கள் வானுலகை சென்றடையும் தகுதியை பெற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.  

29/289:திருக்குறள்-கள்ளாமை

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றாதவர்.களவை தவிர வேறு எதையும் அறியாதவர் அறிவில்லாத துன்பமடைந்து அப்பொழுதே அழிவர்.களவுகள் செய்யாது வாழ்வில் உழைத்து வாழத்தெரியாத மனிதர்கள் தீய செயல் புரிந்து மற்றவர்களை வஞ்சித்து வாழ்வை வாழ நினைத்தால் கெட்டு அழிந்தே போவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

29/288:திருக்குறள்-கள்ளாமை

அறவறிந்தார் நெஞ்சத் தறம் போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.அறநெறி அறிந்தவர் நெஞ்சில் அறம் நிலைப் பெற்றிருப்பது போல களவறிந்தார் நெஞ்சில் வஞ்சனை நிறைந்திருக்கும்.சிறந்த வாழ்க்கையை நடத்தும் மனிதர்கள் அறவழிப்படி நடக்க வேண்டுமென்று நினைவில் வைத்திருப்பார்கள் பொய் களவு கடத்தல் என்று தீய செயல்களை செய்து வருபவர்களின் இதயத்தில் வஞ்சகமான எண்ணங்களும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

29/287:திருக்குறள்-கள்ளாமை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்.தனக்குறிய அளவில் நிற்றல் என்னும் பெருமையை அடைய விரும்புபவர் மனதில் களவு இருண்ட அறிவிருக்காது.மனிதர்கள் தங்களுக்குரிய மரியாதையுடன் சமுதாயத்தில் வாழவேண்டுமென்றால் பொய் களவு கடத்தல் என்ற தீய செயல்களின் மறைவான எண்ணங்கள் உள்ளத்தில் இருக்காது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் 

29/286:திருக்குறள்-கள்ளாமை

அளவின் கண் நின்றொழுகல் ஆற்றார் களவின் கண் கன்றிய காதலவர்.களவாடும் ஆசை அதிகமுள்ளவர் தாம் நடப்பதற்குறிய அளவு முறையில் நின்று நடவார். திருடி வாழும் வாழ்க்கை வழக்கமாக கொண்டவர்கள் களவு செய்வதில் மிக ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் எல்லோருமே தாங்கள் வாழும் வாழ்வியலில் பண்பும் அளவும் அற்றவர்கள் ஒரு ஒழுக்கமுள்ள அறநெறிகளுக்குள் நிக்கமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

29/285:திருக்குறள் -கள்ளாமை

அருள் கருதி அன்புடையராதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பான் கண் இல்.பிறர் பொருளை களவாட காத்திருக்கும் வஞ்சகர்களிடம் அருள் கொண்டு அன்புடையவராக நடத்தல் கூடாது.சமுதாயத்தில் இன்நொருவருடைய செல்வங்களை திருடி வாழுகின்றவர்களை இரக்கப்பட்டு சமுதாயத்தில் அன்பாக அணைத்து வாழ்வியல் நடத்தல் சிறந்த வாழ்க்கைக்கு உகந்ததல்ல என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

29/284:திருக்குறள்-கள்ளாமை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.பிறர் பொருளை வஞ்சித்து கொள்வதில் ஒருவனுக்கு உள்ள விருப்பம் அது பயன் தரும்போது பெரும் துன்பம் கொடுக்கும்.விருப்பபட்டு களவு செய்து அடையும் செல்வங்களால் பயனை அடைய நினைக்கும் பொது மீளாத துன்பங்களிலும் சிறைவாசத்திலும் கொண்டுபோய் தள்ளி விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

29/283:திருக்குறள்-கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.பிறர் பொருள் வஞ்சித்து களவினால் வந்த செல்வம் பெருகுவது போல் தோன்றினாலும் அது அழிந்துவிடும்.மற்றைய மனிதர்களின் செல்வங்களை ஏமாற்றி கொண்டு வரும் செல்வங்கள் அதி உயர்வை தருவது போல காட்சியழித்தாலும் அதில் நன்மதிப்பில்லை அத்துடன் அது என்றும் நிலைப்பதுமில்லை எப்படி வந்ததோ அப்படியே அழிந்தும் விடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

29/282:திருக்குறள்-கள்ளாமை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.உள்ளத்தால் பிறன் பொருளை நினைப்பதும் தவறு ஆதலால் பிறன் பொருளை கள்ளர்தால் வஞ்சித்து கொள்வோம் என்பதும் தவறு.தீமைகளை செய்து திருட்டுகள் செய்ய வேண்டும் என இதயத்தில் நினைப்பதே வாழ்வியலுக்கு உகந்ததல்ல மனிதர்களில் இன்நொருவருக்கு சொந்தமான செல்வங்களை அவர்களுக்கு தெரியாமல் தங்களுடையது ஆக்கி கொள்ள நினைப்பதும் அடைய முயற்சிப்பதும் பிழையான விடயமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

29/281:திருக்குறள்-கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.பிறரால் இகழ்படாமல் இருக்கவேண்டும் என நினைப்பவர் பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளாதிருக்க தன் மனதைக் காக்கவேண்டும்.பிற மனிதர்களிடம் அவமரியாதைப்படாமல் இந்த உலகில் வாழவேண்டுமென்றால் களவு செய்யாமலேயே வாழவேண்டும் மாற்றார் உடைமைகளை தன்னுடமையாக்காது ஆசைகளை உள்ளத்தில் பதித்துக்கொள்ளாது வாழ்வியல் நடத்தவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

28/280:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.தவத்திற்கு ஆகாதவைகளை விட்டுவிட்டால் தலை மயிரை மழித்தாலும் சடை வளர்ப்பதும் வேண்டாம்.சமுதாயத்தாயத்தால் ஒதுக்கி வைக்கப்படும் மதுவை அருத்தாமல் இருந்தால் தலையை மொட்டை அடிக்க தேவையுமில்லை முடியை அடர்த்தியாக வளர்த்து சாமியாராக காட்டிக்கொள்ள வேஷம் போடத்தேவையுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

28/279:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

கணைகொடிது யாழ்கோடு செல்விது ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல்.அம்பு வடிவில் நேராக இருப்பினும் கொடியது யாழ் வளைவாக இருப்பினும் இனியது அவை போல மக்களின் செயல்கண்டு அவர்கள் குணமறிய வேண்டும். அம்புகள் நேராக சென்று இலக்கை அடைந்தாலும் உயிர்களை அழித்து பாவங்கள் செய்யும் கொடுரும் கொண்டது யாழ் வளைவாக இருந்தாலும் யாழின் கொம்பு  இதமான இசைகளை தருவது மனிதர்களின் குணங்களையும் அவர்களின் வாழ்வியல் தரத்தினாலும் செய்கைகளாலும் அறிந்து கொள்ளமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

28/278:திருக்குறள்-கூடா ஒழுக்கம்

மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் மனதில் மாசு நிறந்திக்க தவத்தால் வலிமைப்பட்டவர் போல்காட்டி நீராடி நடிப்பவர் பலர் இவ்வுலகில் உள்ளனர்.உள்ளத்தில் துய்மைகேடுகள் நிறைந்த மனிதர்கள் தவத்தால் சிறப்பு பெற்றவர்களை போல கங்கையில் நீராடி ஒழிந்து வாழ்வினை வாழ்ந்து வரும் தந்திரமுடைய மனிதர்கள் இன்னும் இந்த பூமியின் மேல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்