121/1201: நினைந்தவர் புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. கள்ளைஅருந்தி பொழுது மட்டுமே இன்பம் தரும் ஆனால் முன்பு பெற்ற இன்பம் பிரிவின் போது நினைத்தாலும் இன்பம்தரும் எனவே கள்ளைவிட காமம் இனிது. மது அருந்தினால் அந்த நேரம் மட்டுமே இன்பம் தரும் ஆனால் முன் பெற்ற சிற்றின்பம் பிரிந்த பின்னும் நினைக்க நினைக்க இனிய இன்பம் தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.