Posts

Showing posts from May 2, 2020

108/1080:திருக்குறள்-கயமை

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.கயவர்க்கு ஒரு துன்பம் வந்தபோது தம்மை விரைந்து விற்பர் வேறு எதற்குப் பயன்படுவர்? தீயவர்களுக்கு கஸ்ட துன்பங்கள் வருமாயின் அவர்கள் தம்மை விலையாக விற்று தமது நன்மைகளை அடைய தயங்கமாட்டார்களென எடுத்துரைக்கின்றது . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கம் பாலாஜி பாலசுப்ரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

108/1079:திருக்குறள்-கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.கீழ்மக்கள் பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர் மீது குற்றம் காண்பார். சிறந்த மனமில்லாத மனிதர்கள் உண்பதையும் உடுப்பதையும் சிறப்பாக வாழ்பவர்களை கண்டால் எப்படியாவது அவர்கள்மீது குறை குற்றங்களை கண்டுபிடிக்கமுயல்வார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1078:திருக்குறள்-கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.பிறர் குறைகளை சொன்ன அளவிலேயே மேன்மக்கள் உதவி பயன்படுவர் கீழ்மக்கள் கரும்பை போல பிழிந்தால்தான் பயன்படுவர்.மனிதர்கள் தங்களின் வாழ்வியல் கஸ்டங்களை வசதி உள்ள மக்களிடம் சென்று எடுத்துரைத்தால் அந்த வசதிகொண்டமக்கள் உதவி செய்து ஏழைகளின் வாழ்வினை உயர்த்திவிடுவார்கள் ஆனால் அதே உதவிட மனமில்லாத கீழ்த்தனமான மக்களை கரும்பை பிழிவதுபோல பிழிந்தால்தான் கொஞ்சமாவது உதவக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1077:திருக்குறள்-கயமை

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு.கீழ்மக்கள் தம் கன்னத்தை உடைக்க கையை ஒங்குவார்களே தவிர உண்டு கழுவிய கையை உதரார்.கீழ்தரப்பட்ட மக்கள் சண்டைக்காக முன்னுக்கு நிற்ப்பார்கள் ஆனால் சாப்பிட்ட கையை காகம் துரத்தக்கூட பயன்படுத்தமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை. 

108/1076:திருக்குறள்-கயமை

அறைபறை அன்னர் கயவர்தம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். நாம் அறிந்த இரகசியங்களை புறர்க்கும் கூறுதலால் கீழ்மக்கள் அடிக்கப்படும் பறையப் போன்றவர்கள்.மனிதர்கள் அறிகின்ற இரகசியமான விடயங்களை இரகசிமாக வைத்துக்கொள்ளவதே மனிதவாழ்வுக்கு சிறந்தது இரகசியத்தை அனைவரிடத்திலும் சொல்லித்திரிவது என்பது கீழ்தனமான மக்களால் சாற்றப்படும் பறைக்கு ஒப்பானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1075:திருக்குறள்-கயமை

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவா உண்டேல் உண்டாம் சிறிது.கீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அச்சமே ஒரு பொருள் ஒழுக்கத்தனால் கிடைப்பதனால் அதனாலும் சிறிது ஒழுக்கமுண்டாகும்.ஏழை மக்கள் அச்சப்பட காரணம் பொருட்களை தங்களின் சொந்த பணத்திலேயே ஒழுக்கத்துடன் அடையவேண்டும் என்பதே அப்படிப்பட்ட நேர்மையாலும் நல்லொழுக்கத்தாலும் பெறமுடியாவிடின் அவர்களும் கொஞ்சமாவது நேர்மையுள்ளவர்களாக நடந்து கொள்ள முயற்சிப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

108/1074:திருக்குறள்-கயமை

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.கீழ் மக்கள் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பவரைக் கண்டால் தான் அவனை விட உயர்ந்தவன் என கருதி இறுமாப்பான்.இந்த உலகத்தின் மனித வாழ்வுக்குள் கீழ்ப்படிந்து நடக்கும் மக்களை கண்டால் தங்களை மேலோராக வெளிக்காட்டி பெருமிதமிதம் கொள்வார்கள் கயவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப்புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

108/1073:திருக்குறள்-கயமை

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.கயவர்கள் தேவர்களைப் போலவே தாம் விரும்பியபடி நடப்பார்கள் எனவே கயவரும் தேவர்களும் ஒன்றாவர்.இதிகாசங்களில் வரும் தேவர்களின் வாழ்வியல் நிலை எப்படியோ அதேபோல மனம்போன போக்கில் வாழ்வார்கள் கயவர்களும் அதனால்தான் தேவர்களும் கயவர்களும் ஒன்றென. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

108/1072:திருக்குறள்-கயமை

நன்றறிவாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். கயவர்கள் நல்லவர்களை விட மகிழ்ச்சி உடையவர்கள் ஏனெனில் அவர்கள் மனதில் கவலையற்றவர்கள்.இந்த உலகத்தில் நல்லொர்கள் கெட்டோர்கள் கயவர்கள் என மனிதர்களால் தரம் பிரிக்கப்பட்டுள்ளது இங்கே நல்லொழுக்கம் முடையவர்கள் மனதில் பல கவலைகளுடன் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழ்வார்கள் எனவும்.நல்லொழுக்கம் மற்றவர்கள் எந்த கவலைகளும் இல்லாது இந்த உலகில் மற்றவர்களை ஏமாற்றி தங்கள் வாழ்க்கை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பார் எனவும் திருக்குறல் எடுத்துரைக்கின்றது . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கம் பாலாஜி பாலசுப்ரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

108/1071:திருக்குறள்-கயமை

Image
மக்கள் போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்டது இல்.கீழ்மக்கள் தோற்றத்தினால் மனிதரைப் போலவே இருப்பார்கள் இது போன்ற ஒற்றுமையை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.மனிதர்களின் வாழ்வில் நற்குணமுள்ள மனிதர்களும் உண்டு நற்குமில்லதா மனிதர்களும் உண்டு இந்த இருவகை மனிதர்களிலும் கயவர்கள் தோற்றத்தில் நல்ல மனிதர்களை போலவே காட்சியளிப்பார்கள் என்றுமே ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகவே இருப்பார்கள் இது போன்ற ஒற்றுமையை இந்த உலகில் மக்கள் வேறு எங்கும் கண்டதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் .தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.