Posts

Showing posts from July 31, 2019

69/690:திருக்குறள்-தூது

Image
இறுதி பயப்பினும் எச்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது,தனக்கு சிறப்பு வருவதாயின்னும் தன் அரசனுக்கு நன்மைத் தரக்கூடியதைச் சொல்பவன் தூதன். தூதுவர்கள் தங்களுக்கே கேடு வந்தாலும் தங்களுடைய அரசாங்கத்துக்காக பேசி நன்மைகளை தேடிக்கொடுப்பதே சிறந்த தூதுவர்களுக்கான சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

69/689:தூது திருக்குறள்

Image
விடுமாற்றம்  வேந்தர்க்கு  உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன்.மற்ற அரசனிடம் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சி தாழ்வான சொல்லை தவறியும் சொல்லாத உறுதியுடையவன் தூதுவன்.எதிரிநாட்டு அரசாங்கத்திடமிருந்து துன்ப துயரங்கள் வந்தாலும் அதற்காக பயந்து கொண்டு கீழ்த்தனமான சொற்களை பயன்படுத்தாது உறுதியுடனும்  அஞ்சாத நெஞ்தோடும் உரையாடும் உறுதியானவர்களே தூதுவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

69/688:திருக்குறள்-தூது

Image
தூய்மை துணைமை துணிவுடமை இம்மூன்றின் எண்ணி உரைப்பான் தலை.தூய்மை,துணை துணிவு,இம்மூன்றும் நன்கு வாய்ந்ததால் தூதுவனின் உண்மையான தகுதியாகும்.உண்மையான நிலை உதவிக்கு ஆட்கள் , மனதில் துணிவு இந்த மூன்றும் அமைந்து விட்டால் தூதுவர்களுக்கு அதைவிட வேறு எதுவும் தேவையில்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

69/687:திருக்குறள்-தூது

Image
கடனறிந்து காலம் கருதி இடன்றிந்து எண்ணி உழைப்பான் தலை.கடமை காலம் இடம் இவற்றையறிந்து சிந்தித்து அறிந்தவனே தூதுவன்.செயப்படவேண்டி காரியங்களில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த நேரத்தையும் அறிந்து அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அனைத்தையும் சிந்தித்து செயலாற்றும் தூதுவர்களே சிறப்பான தூதுவர்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

69/686:திருக்குறள்-தூது

Image
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. கற்று அச்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்திற்கு ஏற்றதை அறிந்தவனே தூதுவன்.படித்தவர்களாகவும் எதிரிகளின் பயமுறுத்தல்களுக்கும் அவர்களின் பார்வைகளுக்கும் பயப்பிடாதவர்களாகவும் எதிரிகளின் உள்ளத்தில் நன்றாக பதியும் படி எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர்களாகவும்  தகுந்த நேரத்தில் புரியவேண்டியவைகளை புரிந்துகொள்பவர்களே தூதுவர்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

69/685:திருக்குறள்-தூது

Image
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.செய்திகளை தொகுத்து பயனற்ற வற்றை நீக்கி இனிமையாக சிரிக்க பேசி நலம் செய்பவன் தூதன்.கேட்பவர்களுக்கு மகிழ்வை தரக்கூடிய வண்ணம் செய்திகளை தொகுத்து வழங்குதலும் பயன் இல்லாதவற்றை அகற்றிவிட்டு பயனுள்ள செய்திகளை இனிமையான  பேச்சு திறனால் சிரித்துகொண்டே நல்லவற்றை நலத்துடன் செய்வதே தூதுவர்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

69/684:திருக்குறள்-தூது

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. இயற்கையறிவு தோற்றம் தெளிவு கல்வி இவற்றில் சிறந்தவன் தூதுவனாக செல்லல் வேண்டும்.இயல்பாகவே அறிவும் கம்பீரமான தோற்றமும் தெளிவான கல்வியறிவும் உள்ளவர்களே சிறந்த தூதுவர்களாக செல்வதே சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

69/683:திருக்குறள்-தூது

Image
நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.பகையரசர்முன் வெற்றித்தூது செல்பவன் அரசநீதி கற்றவருள் கற்றவான விளங்க வேண்டும்.எதிரிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த செல்லும் தூதுவர்கள் பல நூல்களை படித்தறிந்தவர்களாகவும்  பல மொழிகளில் தேர்ச்சி உள்ளவர்களாகவும் அரசியல் படித்தவர்களாகவும் இருப்பதே அந்த நாட்டுக்கும் தூதுவர்களுக்கும் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

69/682:திருக்குறள்-தூது

Image
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று. அன்பு அறிவு சிறந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை .சிறந்த அன்பும் அதற்கான பண்பும் அத்தோடு அறிவும் அதனுடன் பேச்சாற்றலுமே தூதுவர்களுக்கு அமையவேண்டிய சிறப்புக்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

69/681:தூது திருக்குறள்

Image
அன்புடைமை ஆனற் குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.அன்பும் உயர்குடிபிறப்பும்  அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள்.அன்புள்ளவர்களையும்  உயர்ந்த குடிகளில் பிறந்த மனிதர்களையும் அரசாங்கங்கள் விரும்பும் பண்புள்ள தூதுவர்களுக்கே உரிய தகுதிகளாக அமையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.