91/904:திருக்குறள்-பெண்வழிச் சேறல்
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று.மனைவிக்கு அஞ்சி நடப்பவன் மறுமை இழந்தவன் அவன் காரியதிறன் பெரும் சிறப்படையாது.மனையாளின் சொல்லுக்கு அடிபணிந்து வாழுகின்ற ஆடவனுக்கு வாழ்க்கை உயராது அவனின் செயல் திறன்களும் பெருமளவில் விரிவடையாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.