98/977:பெருமை திருக்குறள்
திருக்குறள்: இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான் சீரல்லவர்கட் படின். ( குறள் 977 - அதிகாரம் : பெருமை ) பொருள்: உயர்ந்த பெருமை அல்லது சிறப்பு, நற்பண்பில்லாத சிறியவர்களிடம் சென்று சேருமானால், அது தீமையான செயல்களையே செய்யத் தூண்டுவதாய் முடியும். விரிவாக்கம்: கல்வி, செல்வம், அதிகாரம் போன்ற உயர்ந்த சிறப்புகள் எவரிடம் சேர வேண்டும் என்பதில் வள்ளுவர் மிகத் தெளிவாக இருக்கிறகிறார். அத்தகைய சிறப்புகள் ஒரு நல்லவனிடம் சேரும்போது உலகம் உய்யும்; ஆனால், பண்பும் ஒழுக்கமும் இல்லாத கீழ்மக்களிடம் அவை போய் சேர்ந்துவிட்டால், அந்தச் செல்வமும் அதிகாரமும் அவர்களை மேலும் அகந்தை கொள்ளச் செய்து, பல தீய செயல்களையும் தவறான வழிகளையுமே செய்யத் தூண்டும். தகாதவர்களிடம் சேரும் பெருமை தீமையில்தான் முடியும் என்பதை வள்ளுவர் இக்குறளில் எச்சரிக்கிறார். English Translation: Thirukkural: Irappe Purindha Thozhithrthaam Sirapputhaan Seerallavarkat Padin. Meaning: If distinction (wealth, power, or learning) falls to the lot of the unworthy, it will impel them only to evil deeds. Explanation: Valluvar ca...