Posts

Showing posts from March 22, 2019

53/525:திருக்குறள்- சுற்றந்தழால்

கொடுத்தாலும் இன்சோலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும். சுற்றத்தாருக்கு கொடுத்துதவியும் இனிய சொல்பேசியும் வாழ்பவனை அவன் உறவினர் சூழ்ந்திருப்பர்.உற்றார் உறவினர்களுக்கு நல்ல மனதுடன் இனிய சொற்களைப்பேசி  உதவிகள் செய்து வாழ்பவர்களின் வாழ்வில்  அவர்களின் உற்றார் உறவினர் எந்த காலத்திலும்  கூடியே வாழ்த்திருப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

53/24:திருக்குறள்-சுற்றந்தழால்

 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்  செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் . ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் தன் உறவினர் தன்னைச் சூழ்ந்திருக்குமாறு மனதொன்றி வாழவேண்டும்.மனிதர்கள் உழைத்து சேர்க்கின்றது செல்வத்தின் பயனை  அடையவேண்டுமென்றால்  வாழ்வில் தங்களின் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமான முறையில் வாழ்வியலில் சிறப்படைந்தால் மட்டுமே அதற்கு சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்