Posts

Showing posts from February 5, 2020

95/950:திருக்குறள்-மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. நோயாளி ,மருத்துவன்,மருந்து , துணையாளி என்ற இந்நான்கும் மருத்துவத்தின் கூறுகள்.வருத்தமுள்ளவர்கள் ,மருத்துவர்கள், துணையாளிகள் , மருந்துகள் என இந்த நான்குமே மருத்துவத்துறையின் அங்கங்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

95/949:திருக்குறள்-மருந்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும் காற்றான் கருதிச் செயல்.நோயாளிகள் நிலையையும் நோயின் நிலையையும் காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க.நோயளிகளின் நோய்கள் என்ன அவர்களின் வயதுகள் என்ன சிகிச்சைகளை தொடங்க சிறந்த கால நேரங்கள் என்ன என்பதையெல்லாம் முன்கூட்டியே அறிந்து கொண்டே மருத்துவர்கள் செயல்படத்தொடங்க வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

95/948:திருக்குறள்-மருந்து

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் .நோய் இன்தென்றும் அதன் காரணத்தையும் போக்கு வழியையும் அறிந்து பிழையரப் போக்கவேண்டும். உடலில் என்ன நோய் ஏற்பட்டுள்ளதென்பதை அறிந்து என்ன காரனத்தால் எற்பட்டது என்பதின் பொருளை தெரிந்து கொண்டு பிழையின்றி சிகிச்சை பெற்றுக்கொண்டு நோயை உடலிருந்து நீங்கவேண்டும் மீண்டும் அதே பிழைகளை உடலுக்கு செய்யாதிருத்தலும் வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

95/947:திருக்குறள்-மருந்து

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின் அவனிடம் நோய் அளவின்றி வரும். வயிற்றுபசி எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றப்போல் உணவுகளை உண்ணவேண்டும் அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பதால் உடலில் அளவுக்கு அதிகமாகவே வருத்தங்கள் ஏற்படத்தொடங்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

95/946:திருக்குறள்-மருந்து

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்க்கும் கழிபேரிரையான் கண் நோய்.செரிக்கும் அளவு அறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருப்பது போல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் இருக்கும்.எவ்வளவு சாப்பிட்டால் செமிபாடு அடையும் என்ற அளவை தெரிந்துகொண்டு சாப்பிடுபவர்களிடத்தில் என்றுமே நோய்கள் தங்காது உடல் நலமும் சிறப்பாக இருக்கும் சாப்பிடுகின்ற அளவை தெரிந்து கொள்ளாது அளவுக்கு மீறி சாப்பாடுகளை சாப்பிடுகின்றவர்களுக்கு வாழ்நாளில் நோய்கள் உடலில் தேங்கிக்கிடக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

95/945:திருக்குறள்-மருந்து

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிருக்கு.உடலுக்கு ஒத்துக்ககொள்ளும் உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் எதுவுமில்லை.சாப்பிடும் உணவு உடலுக்கும் உயிருக்கு ஒத்துப்போகவேண்டும் அளவாகவும் புதிய உணவாகவும் சாப்பிட்டுவந்தால் உடலில் நோய்கள் வந்து சேராதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

95/944:திருக்குறள்-மருந்து

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து .உண்ட உணவு உடலுக்கு ஒத்து செரிவானதைத் அறிந்து அவ்வுணவையே முழுப்பசியோடு உண்ண வேண்டும். சாப்பிட்ட உணவுகள் உடம்புக்கு ஒத்துபோய் செமிபாடு அடைந்தபின் அதேமாதிரியான சிறப்பான உணவுகளை பசி வயிற்றில் எடுத்தபின்பே சாப்பிடவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

95/943:திருக்குறள்-மருந்து

அற்றால் அளவறித்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு.முன் உண்ட உணவு செரித்த அளவறிந்து அதற்கேற்ப உண்ணவேண்டும் அதுவே உடல் நீண்ட நாள் வாழ நெறி.முதலில் சாப்பிட்ட உணவின் செமிபாட்டின் அளவைஅறிந்து அதற்கேற்றப்போல் உணவை உண்பதே உடலுக்கும் உயிருக்கு நீண்ட ஆயுளைக்கொடுக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

95/942:திருக்குறள்-மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.ஒருவன் உண்ட உணவு செரித்தறிந்து பின் உண்டால் மருந்தென்று ஒன்று வேண்டாம்.சாப்பிட்ட உணவுகள் செமிபாடு அடைந்தபின் வயிற்றில் பசி எடுத்தபின் உணவுகளை சாப்பிட்டால் உணவே மருந்தாகும் அதன்பின் மருந்து என்பது உடலுக்கு தேவையில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

95/941: திருக்குறள்-மருந்து

Image
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணி மூன்று.மருத்துவ நூலோர் வகுத்துக்கூறும் வாத, பித்த ,கபம் கூடினாலும் குறைந்தாலும் நோயைத் தரும் .படித்த மருத்துவர்கள் எவ்வளவுதான் கணக்கிட்டு மருத்துவ முறைப்படி சொன்னாலும் சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்)குறைந்து அல்லது கூடினாலும் உடலுக்கும் உயிருக்கும் நோயை உண்டாக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.