Posts

Showing posts with the label 2/14 திருக்குறள் வான்சிறப்பு

2/14:திருக்குறள்-வான்சிறப்பு

Image
2/14:திருக்குறள்: ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். பொருள்: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்துவிடுமானால், உழவர்கள் ஏரைக் கொண்டு நிலத்தை உழ மாட்டார்கள். விரிவாக்கம்: வான்மழை பொழியத் தவறினால், உழவர்கள் ஏர் பிடித்து நிலத்தைப் பண்படுத்த முடியாது; நிலத்தில் பயிர் விதைத்தாலும் தகுந்த விளைச்சல் கிடைக்காது. அதனால் உழவர்கள் விவசாயம் செய்வதையே கைவிட நேரிடும். மனித சமுதாயத்தின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து தருபவர்கள் உழவர்களே; அத்தகைய உழவர்களின் வாழ்க்கையே வான்மழையை நம்பித்தான் இருக்கிறது என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம். English Translation: Thirukkural: Aerin Uzhaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal. Meaning: If the celestial abundance called rain fails, farmers will no longer be able to plug their plows into the soil. Explanation: Agriculture thrives solely on natural rainfall. When rains fail, the land dries up, rendering cultivation impossible and causing f...