Posts

Showing posts from September 16, 2018

17/170:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும்இல்.பொறாமைக் கொண்டு செல்வம் படைத்துப் பெரியவரானதுமில்லை அது இல்லாதவர்கள் செல்வ வளர்ச்சியில் குறைந்தாருமில்லை.பொறாமை உள்ளம் கொண்டு செல்வம் சேர்ந்து இந்த உலகில் உயர்ந்தவர்கள் யாருமில்லை செல்வமில்லாதவர்கள் தங்களின் வாழ்கையில் செல்வ உயர்வில் குறைந்தவர்களுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/169:திருக்குறள்-அழுக்காறாமை

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செல்வியான் கேடும் நினைக்கப்படும்.பொறாமை உடையவனது செல்வமும் செல்வம் படைத்தவனது வறுமையும் சென்ற வினைப்பயன் என்று ஆராய்ந்துக் கருதப்படும்.பொறாமை உள்ளம் கொண்டவர்களுடைய செல்வமும் பணம் படைத்தவர்களின்  இல்லாமையையும் போன வினைப்பயன் என அலசி அறிந்து கருதப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/168:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்காறு என ஒரு பாவி திருச்சென்றுத் தீயுழி உய்த்து விடும் . பொறாமை என்னும் கொடுமையில் ஒப்பற்ற பாவி தன்னை உடையவனது செல்வத்தை கெடுத்து இப்பிறவியிலும் துன்பத்துள் தள்ளிவிடும்.பொறாமை என்ற கொடிய நோய் கொண்ட மனிதர்களின் செல்வமெல்லாம் அழிந்து போகும் அத்தோடு இந்த மானிடப்பிறவியிலேயே தீராத துயரத்தில் தள்ளிவிடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/167:திருக்குறள்-அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டி விடும்.பொறாமை உடையவனைத் திருமகளும் தான் பொறுக்க முடியாதவளாகித் தன் தமக்கையாக மூத்தவளுக்குக் காட்டிவிட்டு அவள் அகன்று விடுவாள்.பொறாமை உள்ள மனிதர்களை இலட்சுமியும்தான் தாங்கமாட்டாதவளாகித் தனது மூத்த தேவியிடம் (மூதேவிக்கு)அனுப்பி விட்டு தான் அங்கிருந்து சென்று விடுவாள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/166:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பத்தூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதை பொறாமையால் தடுப்பவர் அவர் உடுக்கும் உடையும் உணவுமின்றி வருந்துவர். மனிதர்களின் வாழ்வில் பொறாமை என்பது அழுக்கு நிறைந்த மனம் மற்றய மனிதர்களின் வாழ்வின் சிறப்புகள் கண்டு மகிழ்சியடையாது பொறாமை கொண்டு அவர்கள்மீது வெறுப்பு உணர்வை ஏற்படுத்திக்கொள்வது இப்படியான மன ஆற்றல் உள்ள மனிதர்கள் உண்மையிலேயே மக்களுக்கு உதவி செய்ய முற்படுகிறன்போது அதை தடுத்து விட முயற்சிகள் செய்வார்கள் இப்படியான மனிதர்கள் தங்களின் வாழ்வில் உணவு உடையின்றி வருந்தி வாழ நேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

17/165:திருக்குறள் -அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது  பொறாமையுடையவனுக்கு அவன் பகைவர் கேடு செய்யத்தவறினாலும் அவனுடைய பொறமையே அவனுக்கு துன்பம் கொடுக்கும் .  பொறாமை உள்ள மனிதர்களுக்கு அவர்களின் பகைவர்கள்தான் கேடு செய்யவேண்டுமென்றில்லை அவர்களின் அழுக்காறு குணமே அவர்களை அழித்துவிடும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

17/164:திருக்குறள்-அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம்படுபாக்கும் அறிந்து.தீய வழியால் துன்பம் ஏற்படுவதை உணர்ந்த அறிவுடையார் பொறாமையின் பொருட்டு பிறக்கு தீங்கு செய்யார்.மனிதர்கள் மீது பொறாமை கொள்வதால் துன்பம் வந்து சேரும் அத்துன்பம் வராமல் இருக்கு அறிவுடையார் பொறாமையான செயல்களை பிறருக்கு செய்யாதிருத்தல் சிறந்த மனித வாழ்வுக்கு வழியமைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

17/163:திருக்குறள்-அழுக்காறாமை

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்.பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழாது பொறாமைக் கொள்பவன் தனக்கு பொருளையும் அறத்தையும் வேண்டாதவனாக இருப்பான் .இந்த உலகில் மனிதர்களின் வாழ்வில் செல்வச்செழிப்புடன் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் வாழக்கூடும் அவர்களின் வாழ்வை கண்டு மகிழ்சியடையாது பொறாமை கொள்ளும் மனிதர்கள் தங்களுக்கு என்று எதையும் சேர்த்து வைத்து இல்லறத்தை நடத்தாதது தங்களின் வாழ்வையும் வெறுப்புடன் இந்த வாழ்க்கையே வேண்டாதவர்களாக வாழும் மனிதர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் இந்த உலகிற்கு .

17/162:திருக்குறள்-அழுக்காறாமை

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையாம் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். ஒருவன் எவரிடத்திலும் பொறாமையற்றவனாக இருக்கும் பண்பினைப்பெறுவானின் அவன் பெறுவதற்குரிய ஊதியங்களுள் அதுபோன்ற சிறந்தது வேறில்லை.மனிதர்களின் வாழ்வியல் சிந்தனைக்குள் பொறாமையற்றவர்களாக வாழ்வதே சிறந்த வாழ்வுகுரிய வாழ்க்கையாகும் அப்படி வாழுக்கின்ற வாழ்க்கையிலேயே மனிதர்களுக்கு சிறப்பான வாழ்வியல் சிந்தனையென எடுதுரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

17/161:திருக்குறள்-அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. தன் மனதில் பொறாமை இல்லாத நல்லியல்பினை தன் ஒழுக்க நெறியாகக் கொண்டிருத்தல் வேண்டும்.மனிதர்களின் வாழ்வில் தங்களின் மனதில் பொறாமையற்றவர்களாக இந்த உலகில் வாழப்பழகவேண்டும் நல்லெண்ங்களை வாழ்வின் ஒழுக்க நெறியாக கொண்டு வாழ்வதே சிறந்த மனித வாழ்வியலுக்கான ஒழுக்கமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒகுறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/160:திருக்குறள்-பொறையுடைமை

உண்ணாது நோன்பார் பெரியர்  பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுப்பவர் உண்ணாமல் தவம் செய்யும் துறவியை காட்டிலும் உயர்ந்தவராவார் . அன்னியர்கள் செப்பித்திரியும் துஸ்ட வார்த்தைகளை கேட்டு மெளனமாக இருப்பவர்கள் சாப்பிடாமல்  இருந்து  தவம் புரியும்  துறவிகளை விட மிக உயர்ந்தவர்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/159:திருக்குறள்-பொறையுடைமை

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர்.தீயவர் சொல்லும் கொடும் சொற்களைப் பொறுப்பவர் துறவிகளைவிட தூயவராவார். கெட்ட மனிதர்கள் பேசும் கடும் கூடாத வார்த்தைகளை கேட்டு அதை தாங்கி கொள்ளும் மனிதர்கள் துறவிகளைவிட சிறந்தவர்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/158:திருக்குறள்-பொறையுடைமை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத்தாந்தம் தகுதியான் வென்று விடல்  ஆணவத்தினால் தீமைச் செய்தவர்க்கும் நன்மையைச் செய்து பெரும்தன்மையால் வென்று விட வேண்டும்.திமிரினால் கூடாத செயல்களை செய்தவர்களுக்கு நல்விளைவுகளை செய்து பெருந்தன்மையுடன் அவர்களை வெல்ல வேண்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/157:திருக்குறள்-பொறுயுடைமை

திறனல்ல தற்பியர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.பிறர் முறையற்ற தீமைச் செய்தாலும் அவருக்கு அறமற்ற துன்பத்தை செய்யாதிருந்தல் சிறந்தது.மற்றவர்கள் முறையில்லாத செயல்களை செய்தாலும் பண்பில்லாத துயரத்தை கொடுக்காமல் இருப்பது சிறப்பாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

16/156:திருக்குறள்-பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.தவறு செய்தாரை தண்டித்தவர்க்கு அத்தருணம் மக்கிழ்ச்சியே ,ஆனால் பொறுத்தார்க்கு உலகம் உள்ளவரை புகழ் உண்டு. இந்த உலகில் மனிதர்கள் தவறுகள் புரியக்கூடும் அந்த தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனையை வழங்கி வந்தால் தவறுகளை செய்தார்வர்கள் தண்டிக்கப்பட்டால் சமுதாயத்துக்கு மகிழ்சியே ஆனால் பொறுமையாக சிந்தித்து செயல் பட்டால் என்றும் தர்மத்தை வென்று புகழையும் அடையமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/155:திருக்குறள்-பொறையுடைமை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.பிறர் செய்த தீமையை பொறுக்காமல் தண்டிப்பவரை எவரும் மதியார் பொறுத்தவரை பொன்போன்று மதிப்பார்.மற்றவர் செய்த நன்மை இல்லாத விடயங்களை தாங்கி கொள்ளமுடியாமல் தண்டனை வழங்குபவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள் பொறுமைசாலியாக இருந்தவர்களை  தங்கம் போல மனிதன் என்ற மரியாதை மனங்களின் பதித்துகொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

16/154:திருக்குறள்-பொறையுடைமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் பொறுமையைப் பாதுகாத்து நடப்பவனிடம் அவன் நற்குணங்கள் நீங்காதிருக்கும.அமைதியாய் வாழ்க்கை நடாத்தும் மனிதர்களிடம் அவர்களின் நற்குணங்கள் நிலைத்திருக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

16/153:திருக்குறள்-பொறையுடைமை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மையான மடவார்ப் பொறை வறுமையிலும் வறுமை விருந்தினரை உபசரிக்காதிருந்தால் வீரத்திலும் வீரம் என்பது பிறர் செய்யும்  தவற்றினைப் பொறுப்பது.பஞ்சத்திலும் பஞ்சம் ஆக கூடிய பஞ்சம் வீட்டுக்கு வந்த விருதாளிகளை உபசரிக்கமுடியாத நிலை அதேமாதிரி வீரத்திலும் வீரமே என்பதெல்லாம்  இன்னொருவர் புரியும் தவறினை ஏற்றுக்கொள்வதே  என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

16/152:திருக்குறள்-பொறையுடைமை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் தன்னைமறந்த நன்று.ஒருவன் செய்யும் தீமையை பொறுத்துக்கொள்ள வேண்டும் அதனை மறந்துவிடுதல் அதனினும் பெரும் சிறப்பு.மனிதர்கள் தீமைகளை செய்யும் போது பொறுத்தாளவேண்டும் அந்த தீய செயல்களை மன்னித்து மறந்தால் கூட வாழ்க்கைக்கு சிறப்புத்தான் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.