64/634: அமைச்சு திருக்குறள்
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு.செயல் பற்றி ஆராய்தல் ஆராய்ந்தபின் செயல் புரிதல் அறிந்தவற்றை உறுதியாகச் சொல்லுதல் இவற்றில் சிறந்தவன் அமைச்சன்.மனித வாழ்வில் எதையும் ஆராய்ந்து செயல்படுவது நன்று எதை ஆராய்சி செய்து சிறப்பு பெறுகின்றோமோ அதை தக்கதருணத்தில் சரியான இடத்தில் உறுதியாக செயல்புரிந்து நல்லவற்றை நாட்டுக்காக எடுத்துரைக்கும் அமைச்சே உலகில் சிறந்த அமைச்சு.என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.