Posts

Showing posts with the label 14/136 திருக்குறள் ஒழுக்கமுடைமை

14/136:திருக்குறள்-ஒழுக்கமுடைமை

Image
திருக்குறள்: ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. (குறள் 136 - அதிகாரம்: ஒழுக்கமுடைமை) பொருள்: ஒழுக்கம் தவறுவதால் பெரும் குற்றமும் துன்பமும் வந்து சேரும் என்பதை நன்கு அறிந்திருப்பதால், மனவலிமையும் அறிவும் உடைய சான்றோர் தம் கடமையிலும் ஒழுக்கத்திலும் சிறிதும் தளர மாட்டார்கள். விரிவாக்கம்: அறிவும் மனஉறுதியும் உள்ள மனிதர்கள் கொஞ்சமும் பிழையில்லாமல் எப்பேர்ப்பட்ட கடினமான காரியத்தையும் தம் ஒழுக்கம் தவறாமல் சரிவரச் செய்து முடித்து விடுவார்கள்; ஏனென்றால் ஒழுக்கத்திலிருந்து தவறினால் பல பிரச்சினைகளும் துன்பங்களும் வாழ்வில் வந்து சேரும் என்பதை அவர்கள் முன்கூட்டியே தெளிவாக அறிந்திருப்பார்கள் என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார். --- English Translation: Thirukkural: Ozhukkaththin Olgaar Uravor Izhukkaththin Aedham Padupaak Karindhu. Meaning: The strong-minded and wise never swerve from virtuous conduct, knowing well the ruin and sorrow that arise from deviating from it. Explanation: Thiruvalluvar explains why disciplined and wise individuals remain steadfa...