Posts

Showing posts with the label 92/911 திருக்குறள் வரைவின் மகளிர்

92/918:திருக்குறள்-வரைவின் மகளிர்

ஆயும்அறிவினர் அல்லார்க்கு அணங்ககென்ப மயா மகளிர் முயக்கு. வஞ்சக விலைமகளின் தழுவுதல் ஆராய்ந்தறியும் அறிவற்றவர்க்கு சொர்கம் போன்றதாகும்.மோசடி செய்யக்கூடிய விலைமாதர்களின் மடியிலும் அழிகிலும் மயங்கி விழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு அறிவில்லாத பெண்மயக்கமென்றே உலகத்தார் கூறுவாரென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

92/916:திருக்குறள்-வரைவின் மகளிர்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்.அழகு ஆடல் பாடல்களினால் இழிவான இன்பத்தைப் பரப்பும் பெண்ணின் தோளை தன் புகழ்பரப்புவார் நாடாதிருப்பார்.தன் புகழ் சிறந்திருக்கவேண்டுமென்றால் உடல் அழகை காட்டி ஆடல் பாடல்களினால் கீழ்த்தனமான இன்பத்தை உருவாக்கும் பெண்களின் அழகில் வீழ்ந்து விடதா ஆண்களே தங்களின் கெளரவமான புகழில் நிலைத்திருக்க முடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.