Posts

Showing posts with the label 100/1000:-பண்புடைமை திருக்குறள்

100/1000:திருக்குறள்-பண்புடைமை

Image
திருக்குறள்: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று.  ( குறள்  1000 -  அதிகாரம் :  பண்புடைமை ) பொருள்: நற்பண்பு இல்லாதவன் அடைந்த பெரிய செல்வமானது, தூய்மையற்ற பாத்திரத்தின் குறைபாட்டினால் நல்ல பால் திரிந்து கெட்டுப் போவதைப் போன்றதாகும். விரிவாக்கம்: பண்புடைமை என்ற அதிகாரத்தின் இறுதிச் செய்யுளான இது, ஒரு மனிதனுக்கு நற்பண்புகளின் அவசியத்தை மிக அழகாக உணர்த்துகிறது. பாத்திரம் தூய்மையாக இல்லாவிட்டால், அதில் ஊற்றி வைக்கப்படும் பசுவின் நல்ல பால் திரிந்து பயனற்றுப் போவது போல, நற்பண்புகளும் சான்றாண்மையும் இல்லாத தீயவர்களிடம் போய்ச்சேரும் பெருஞ்செல்வமும் யாருக்கும் பயன்படாமல் கெட்டுப்போகும். செல்வத்திற்கு மதிப்பு தருவது அதை வைத்திருப்பவனின் நற்பண்பே அன்றி, செல்வத்தின் அளவு மட்டும் அல்ல என்பதை வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். English Translation: Thirukkural: Panpilaan Petra Perunjchelvam Nanpaal Kalandheemaivaal Thrindhatru. Meaning: The great wealth acquired by a person void of good character is like pure milk turning sour due to the impurity of the ...