123/1223:பொழுதுகண்டு இரங்கல்
பனி அரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.காதலருடன் இருந்தபொழுது நடுங்கி மங்கி வந்த மாலைப்பொழுது இப்பொழுது எனக்கு துன்பம் மிகும்படி வந்தது.விருப்பியவருடன் வாழ்ந்தபோது நன்றாக இருண்ட பின்பே வந்த பொன்மாலைப்பொழுதே இப்பொழுதெல்லாம் துன்பத்தில் வாடும்போது வந்ததென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.