Posts

Showing posts from February 6, 2020

96/956:திருக்குறள்-குடிமை

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்த்தும் என்பார். நற்குடி ஒழுகத்திற்கேற்ப வாழ்வோம் என்போர் பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.நல்லகுடும்பத்தில் பிறந்தவர்கள் நல்லொழுக்கத்துடன் வாழ்வினில் வாழவேண்டுமென்று விருப்பினால் தீய செயல்களிலும் வஞ்சனை செயல்களிலும் ஈடுபட்டு அவமரியாதையை வாழ்வினில் தேடிக்கொள்ள விருப்பபடமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/955:திருக்குறள்-குடிமை

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று.கொடுப்பதற்கு செல்வம் வற்றிய காலத்தும் நற்குடி பிறந்த பழங்குடிமக்கள் கொடைத்தன்மையை விடார்.உயர்குலத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு செல்வங்கள் குறைந்தகாலத்திலும் மற்றவர்களுக்கு தானங்களையும் தர்மங்களையும் கொடையாக கொடுக்க தயக்கமட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/954:திருக்குறள்-குடிமை

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.கோடி கோடி பொருளைப் பெற்றாலும் நற்குடியில் பிறந்தவர் இழிவான சிறுசெயல்களை செய்யார்.எவ்வளவு பணம் பொருள்களை தருவதாக சொன்னாலும் மேற்குடியில் பிறந்த மக்கள் தாழ்வான காரியங்களை என்றென்றுமே செய்யமுன் வரமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/953:திருக்குறள்-குடிமை

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாயமைக் குடிக்க.முகமலர்சி கொடைத்தன்மை இனியசொல் பிறரை இகழாமை இந்நான்கும் நல்லகுடியின் இயல்புகள்.இப் புவியியல் வாழ்வுதனில் முகமலர்சியுடன் கொடைத்தன்மை கொண்ட மனிதர்களின் வாழ்வும் மக்களுடன் இனிதாக பேசி வாழ்பவர்களும் பிறரை என்று சமுதாயத்தில் இகழாது வாழ்பவர்களும் இந்த உலகில் நற்குடிகளின் இயல்புடையவர்கள் என எடுத்துரைக்கின்றது குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/952:திருக்குறள்-குடிமை

ஒழுக்கம் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந்தார் . உயர்குடி பிறந்தார் , ஒழுக்கம் , உண்மை மானத்திற்கு அஞ்சுதல் ஆகியவற்றில் நிலை தவறமாட்டார்கள். நல்லகுடுபங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒழுக்கம் வாய்மைதவறாது வாழ்க்கை நடாத்துதல் நாணத்துடனும் வாழுகின்ற வாழ்வை சிறப்புற வாழ்வதும் உண்மையையும் நேர்மமையையும் சமுகத்தில் கடிப்பிடிப்பதும் தங்களின் மானத்திற்காக பயந்து என்றும் நல்வழியில் செல்லும் மனிதர்களாகவும் நற்பண்புகள் கொண்டவர்களெனவும் எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

96/951:திருக்குறள்-குடிமை

Image
இற்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு . நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்ககமும் பாவங்களுக்கு அஞ்சும் நாணமம் சபையில் சிறப்பாக பேசும் தன்மையும் இயல்பாக அமைவதில்லை.நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடைய செயல்கள் என்றும் சிறப்பாகவே இருக்கும் சொல்வண்மை பாவங்களை தவிர்தல் மற்றவர்களும் தீங்கு விளைவிக்காது வாழ்வியல் நடாத்தும் தன்மையை நற்குடியில் பிறவாதவர்களிடம் எதிர்பார்க்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.