Posts

Showing posts from November 26, 2019

86/860:இகல் :திருக்குறள்

Image
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. மாறுபாட்டினாலே தீயன எல்லாம் உண்டு நட்பு கொள்ளுதலில் நல்முறை எனும் பொருட்செல்வம் உண்டாகும்.மனவேற்றுமை கொண்டு விரோதத்துடன் வாழ்வியல் நடாத்து மனிதர்களின் வாழ்க்கை துன்பங்களை சுமந்ததாக அமையும் சிறந்த எண்ணங்களுடன் வாழ்வியலில் வாழும் மனிதர்களின் வாழ்வு சிறப்பானதாக விளங்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/859:இகல் திருக்குறள்

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. செல்வம் வரும் போது மாறுபாட்டை நினைக்காதவன் பொருட்கேடு வரும்போது மிகுதியும் அதனை நினைப்பான்.மனிதர்கள் தங்களுக்கு எப்போதும் நன்மையே நடக்கும்போது மாறுதலை விருப்பமாட்டார்கள் ஆனால் அதே கேடாகமாறி அழிவுகளை கொடுக்கும்போது அந்த மாறுதலை பெரிதாக எடுத்துக்கொண்டு மனவருத்தமடைவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/858:இகல் திருக்குறள்

Image
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.மாறுபாட்டிற்கு எதிராக விலகி போதல் செல்வ வளர்சிக்கு நல்லது அதனை மேற்கொள்ளுதல் செல்வகேட்டினை உண்டாக்கும்.மனதில் எற்படும் வக்கிரத்தின் புத்தியால் சிலவும் அதை மாற்றி சிறந்த எண்ணங்களை நினைத்துக்கொண்டால் சிறந்த லாபத்தையும் வாழ்வினில் அடையலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/857:இகல் திருக்குறள்

Image
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவினவர் . மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவுடையவர்கள் மேன்மையான நீதி நூல் பொருளை அறிய மாட்டார்கள். விரோதமான மன உணர்வு கொண்ட மனிதர்கள் தீர்வுக்கான வழிகளை தெரிந்து கொள்ள விருப்பமாட்டார்கள் நீதி நியாயப்படி எழுதப்பட்டநூல்களின் சிறப்பம்சங்களையும் புரிந்து கொண்டு செயல்படமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/856:இகல் திருக்குறள்

Image
இகலின் முகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.எதிர்த்து மாறுபடுவது நல்லதென்று கருதுபவனது வாழ்க்கையானது பிழைப்பட்டு முழுதுங்கெட்டு போகும்.எதிர்த்து போராடி மாறுதலை உருவாக்கலாம் வெற்றியையும் பெற்றுவிடலாமென நினைக்கும் மனிதர்களின் வாழ்வியல் மிக விரைவில் இந்த உலகிலிருந்து அழிந்து போய்விடுமேன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/855:இகல் திருக்குறள்

Image
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர். மாறுபாட்டிற்கு எதிர்க்காது விலகி நடக்கும் வல்லவரை வெல்ல நினைக்குந்தன்மையுடையவர் யாவர் ? இதயத்தில் வெறுவிதமான எண்ணங்களுக்கு இடமளிக்காது வாழக்கூடிய மனிதர்களை இந்த உலகில் யாரால் வென்று விடமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/854:இகல் திருக்குறள்

Image
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.துன்பத்துள் துன்பமாகியது மாறுபாடே அது ஒழிந்து போனால் இன்பத்திலும் இன்பத்தைக் கொடுக்கும்.துன்பத்தை கொடுப்பதே தீய உணர்வுகள்தான் அந்த உணர்வுகள் உள்ளத்திலிருந்து விலகிவிட்டால் இன்பதிலும் இன்பமே தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/853:இகல் திருக்குறள்

Image
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தகவில்லாத் தாவில் விளக்கம் தரும். மாறுபாடு எனும் துன்ப நோயை மனத்தை விட்டு நீக்கினால் அது அவனுக்கு புகழைக் கொடுக்கும்.இதயத்தால் மாறுபாடு கொள்ளுதல் என்ற வருத்தத்தை மனிதர்கள் நீக்கிகொண்டால் சிறந்த புகழை இந்த உலகில் அடையமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/852:இகல் திருக்குறள்

Image
பகல்கருதிப் பற்றா செயினும் இகல் கருதி இன்னாசெயாமை தலை.பிரிவு உண்டாகக் கருதி ஒருவன் வெறுப்பனவற்றை செய்தாலும் மாறுபாடு கொள்ளாமல் அவனுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதே நல்லது.வேற்றுமையை மனதில் கொண்டு தீங்கான செயல்களை செய்யும்போது அவர்களுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுடன் விரோதத்தை வளர்த்து கொள்ளாது வாழ்வினை வாழ்வதே சிறந்த மனிதர்களின் பண்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மன ிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

86/851:இகல் திருக்குறள்

Image
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். எல்லா மக்களுக்கும் கூடாமையாகி தீங்குணத்தை வளர்க்கும் நோய் இகல் எனப்படும்.மனிதர்களின் வாழ்வில் மனிதர்களோடு மனிதர்கள் சேர்ந்து வாழாது தீயகுணங்களை மனங்களில் வளர்த்துக்கொண்டு வாழும் வாழ்க்கையை மனிதர்களே வளர்கின்ற மனவேறுபாடு ஒருவகை வருத்தமே எனப்படும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.