Posts

Showing posts from December 29, 2018

47/464:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சுபவர். இழிவான குற்ற உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் தமக்குத் தெரியாத செயலில் ஈடுபடமாட்டார்.எந்த விதமான வேலையாய் இருந்தாலும் அதனை தெளிவுற்ற பின்னேயே தொடங்கவேண்டும் அதில் தெளிவு பெறமாட்டோம் என்று தெரிந்தால் தொடங்காமல் இருப்பதே உயர்வு தரும் தெரியாத தொழிலை செய்ய தொடங்கி அவமானப்படுவதை தவிர்க்கவேண்டுமானால் தெரியாதவற்றில் ஈடுபடாமல் இருப்பது வாழ்வுக்கு உகந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

47/463:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.என்றோ வருவதை எண்ணி உள்ளத்தையும் இழக்கும் செயலில் அறிவுடையோர் ஈடுபடமாட்டார்.எப்பவோ வரும் நன்மை தீமைகளை உள்ளத்தில் எண்ணிக்கொண்டு உள்ளத்தையே இழக்கும் செயல்களில் அறிவுள்ள மனிதர்கள் காலத்தை கழிக்கமாட்டார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

47/462:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும் பொருள் யாதொன்றும் இல். தகுதி உடையவர்களுடன் சேர்ந்து செய்பவருக்கு , செய்ய இயலாதது ஒன்று இல்லை.ஒரு சமுதாயத்தில் எல்லாத்தகுதியுடையவர்களுடனும் கூடி வாழ்வை வாழ்பவர்களுக்கு இந்த உலகில் செய்து முடிக்க முடியாத ஒன்றுமே இருக்கமுடியாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

47/461:திருக்குறள்-தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகிய வழிபயப்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். ஒரு செயலை செய்யுமுன் அதனால் ஆவதுயும் அழிவதையும் அதனால் வரும் ஆதாயத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.மனிதர்களே உங்கள் வாழ்வில் எதை செய்யதொடங்கினாலும் அச்செயல்பாட்டை செய்யமுன் உங்களால் ஏற்படுத்தப்படும் முயற்சியால் சமுதாயத்துக்கு வரும் அழிவுகளையும் மக்களுக்கு ஏற்படப்போகும் துண்பங்களையும் ஆதனால் ஏற்ப்படப்போகின்ற நன்மைகளையும் முன்கூட்டியே சிந்தித்து செயல்படவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

46/460:திருக்குறள்-சிற்றினம் சேராமை

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற்படுப்பதூஉம் இல். மனிதர்க்கு நல்ல சேர்க்கையை விட சிறந்த துணையில்லை.கெட்ட சேர்க்கையை விட வேறு தீமை இல்லை. மனிதர்களின் வாழ்விற்கு சிறந்த நடப்புகளை விட சிறப்பான துணை எதுவுமில்லை அதேபோல கூடாத நட்பை விட தீமையானது இந்த உலகில் வேறு ஏதுமில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள். குறளின் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

46/459:திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனநலத்தின் ஆகும் மறுமை மற்றஃதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து.நல்ல உள்ளத்தால் மறுபிறவியில் இன்பம் கிடைக்கும் அதனினும் நற்கூட்டு நல்லது.மனிதர்களின் நல்ல இதயங்களால் மறுபிறவி வாழ்வில் இன்பம் கிடைக்க இருந்தாலும் சிறப்பான நட்புகள் வாழ்வினில் சிறந்தவை என எடுத்துரைக்கிறது திருக்குறள் குறளின் புலமை. பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

46/458;திருக்குறள்-சிற்றினம் சேராமை

மனநலம் நன்குடைய ராயனும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.சான்றோர்க்கு மனம் நல்லதாக இருந்தாலும் சேர்க்கையும் நல்லதாக இருப்பது சிறப்பு.மக்களின் வாழ்வில் நல்ல மனங்களுடன் வாழ்ந்தாலும் பல விதமான நன்மைகளை செய்தாலும் இனநலத்தில் ஈடுபட்டாலும் சேர்க்கை என்பது நல்லதாக இருத்தல் வேண்டும் அதாவது பண்பும் பணிவும் சிறந்த நற்சிந்தனைகளுடைய சேர்க்கையே வாழ்விற்கான சிறப்பளிக்கும் என எடுத்துக்கின்றது குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.