Posts

Showing posts from September 27, 2018

27/261:திருக்குறள்-தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறு கண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் பிற உயிர்களை துன்புறுத்தாதிருத்தல் ஆகியவை தவத்தின் வடிவங்களாகும்.மனித வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை பொறுத்து கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை  பிற உயிர்களுக்கு துன்பங்களை விளைவித்து வாழும் வாழ்வில் சிறப்பில்லை மனிதர்களின் ஆண்மா தவத்தினை பெறவேண்டுமானால் மனிதவாழ்வில் சிறந்தவற்றை சிறப்பாக செய்து மன அமைதியுடன் வாழும் வாழ்வே தவத்திற்கான சிறப்பாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

26/260:திருக்குறள்-புலால் மறுத்தல்

கொல்லான் புலாலை மறுத்தனானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.உயிரைக் கொல்லாதவனையும் ஊனை உண்ணாதவனையும் உலக உயிர்கள் வணங்கி நிற்கும்.உயிரினங்களை வெட்டி அதன் உயிர்களை பறித்து உடலையும் சதையையும் சாப்பிடாத மனிதர்களை உலகில் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

26/259:திருக்குறள்-புலால் மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.நெய் ஊற்றி ஆயிரம் வேள்விகளை செய்வதைக்காட்டிலுல் ஓர் உயிரைகொன்று உண்ணாதிருப்பது நன்மை.பலவிதமான யாகங்கள் செய்து புண்ணியத்தை தேடிக்கொள்வதை விட உயிரினங்களின் உயிர்களை வதைத்து உயிர்களை உயிரற்றதாக்கி சாப்பிடாமல் இருந்தால் அதுவே உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்மையாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

26/258:திருக்குறள்-புலால் மறுத்தல்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.குற்றமற்ற அறிஞர் உயிரற்ற ஊனை உண்ணமாட்டார். குற்றமில்லாத அறிவாளிகள் அறிஞர்கள் உயிரினங்களின் உயிர் இல்லாத உடலின்  தசையை ஒருபோதும் சாப்பிடமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு 

26/257:திருக்குறள்-புலால் மறுத்தல்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது  உணர்வார்ப் பெறின்.புலால் ஒரு உடம்பின் புண் என்ற இழி நிலையை உணர்ந்தால் புலாலை எவரும் உண்ணார்.இறைச்சி உயிர்களின் இறந்த உடலின் தசை என்பதின் தாழ்வு நிலையை புரிந்து கொண்டால் இந்த உலகின் மனிதர்கள் புலால்களை சாப்பிடமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

26/256:திருக்குறள்-புலால் மறுத்தல்

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்வி லைப்பொருட்டால் ஊன்றருவார் இல்.உண்பதற்ககாக உயிரை எவரும் கொல்லாவிடின் உயிரை அழித்து ஊண் விற்பவர் எவரும் இருக்க மாட்டார்கள்.உயிரினங்களை உண்ணும் மனிதர்கள் உலகில் இல்லாவிட்டால் உயிர்களை கொண்று சந்தைப்படுத்தும் வியாபாரிகளும் இறைச்சி கடைகளும் உலகில் இயங்காது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

26/255:திருக்குறள்-புலால் மறுத்தல்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.ஊண் உண்ணாமையால் உயிர் நீண்ட நாள் நிலைத்திருக்கும் ஊண் உண்பவரை நகரமும் உண்ணாது.உலகத்தில் உயினங்கள் நிலைத்து வாழவேண்டுமென்றால் மனிதர்கள் உயிரினங்களின் உயிர்களை அழித்து உண்ணாமல் விட்டால் உயிரினங்களின் உயிர்கள் நிலைத்திருக்கும்.மாமிசங்களை உண்ணும் மனிதர்களை நரகம் என்றும் சூழ்ந்துகொள்ளும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

26/254:திருக்குறள்-புலால் மறுத்தல்

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் திடல்.அருள் என்பது பிற உயிர்களை கொல்லாதிருந்தால் அருளில்லாத கொலையால் வரும் புலால் உண்ணுதல் பாவம் புண்ணியமன்று.உயிர்களை மனிதர்கள் உயிர்வதை செய்து கொல்லுதல் சிறந்த அறமில்லாதாது அதன்பின் இறந்த உயிர்களின் உடல்களை உண்பதும் பாவமாகும் வாழ்வினிலும் வாழ்க்கைக்கு பின்னும் நல்வினை பயன்களை அடையமுடியாது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

26/253:திருக்குறள் புலால் மறுத்தல்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.கொலை கருவியைத் தாங்கியவனிடம் இரக்கமிருக்காது  அதுபோல் இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது.உயிர்களை கொண்று வாழுகின்ற மனிதர்களிடையே ஈவு இரக்கமிருக்காது அதுபோலவே மாமிசம் உண்ணுகின்றன மனிதர்களிடையே பிற உயிரினங்களுக்கு இரக்கப்பட்டு உதவிகள் புரியும் மனமிருக்காதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

26/252:திருக்குறள்-புலால் மறுத்தல்

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தீன் பவர்க்கு.பொருளை பாதுகாக்காதவர்களுக்கும் அதன் பயனில்லை அதுபோல புலா உண்பவர்க்கு அருளால் பயனில்லை.செல்வங்களை தேடி வைத்திருக்கும் மனிதர்களுக்கு அந்த செல்வங்களை பாதுகாத்து கொள்ளவேண்டிய தகமை இருத்தல் வேண்டும் அந்த தகுதி இல்லாதவர்களுக்கு செல்வம் இருந்தும் பயனில்லை அதேபோல் ஏனைய உயிர்களின் உயிரற்ற தசைகளை உணவாக சாப்பிட்டு மகிழும் மனிதர்களுக்கு உயிர்கள் மீது இரக்கம் கொள்ளும் ஆற்றல் இருக்காது.என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

26/251:திருக்குறள்-புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். தன் உடல் பெருக்கத்திற்கு பிற தசைகளை உண்பவன் எவ்வாறு பிற உயிர்களிடத்து அருளுடையவனாக இருக்கமுடியும்.மனிதர்கள் தங்களுடைய உடம்பை பெரிதாக வளர்த்துக்கொள்ள ஏனைய உயிர்களின் உடலின் தசைகளை சாப்பிடும் மனிதர்கள் எப்படி உயிர்களில் இரக்கமுள்ளவர்களாக வாழமுடியும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்