Posts

Showing posts from August 6, 2019

70/700:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். அரசனுக்கு பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நன்புரிமை கேடு விளைவிக்கும்.நீண்டகாலத்து நட்புறவுதானே என்று எண்ணி முறைகேடான செயல்களை உரிமை எடுத்துக்கொண்டு செய்தால் அதுவே நட்பினை முறித்துக்கொள்ளக் காரணமாகிவிடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

70/699:மன்னரைச் சேர்ந்தொழுகல் திருக்குறள்

Image
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சியவர்.அரசனால் மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் தெளிந்த அறிவுடையார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களினால் அமர்த்தப்பட்டவர்கள் என்ற நினைவில் தவறான செயல்களை செய்யாது இருப்பதே சிறந்த அறிவாளிகளின் திறனாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

70/698:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
இளையர் இனைமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப்படும்.அரசன் இளையவர் தன் உறவினர் என்று அவமதியாமல் . அரசனது அதிகாரத்தை மதித்து நடக்க வேண்டும் .அரசாங்க ஆட்சியாளர்களை வயதில் குறைந்தவர்கள் என்றோ அல்லது உறவினர்கள் என்றோ குறைத்து மதிப்பிடாமல் அவர்களின் அரசியல் தகுதிகளை நினைவில் கொண்டே நட்பினை நாடுவது உகந்தென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

70/697:மன்னரைச் சேர்ந்தொழுகல் திருக்குறள்

Image
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.அரசன் விரும்பாவிடினும் வேண்டியதைச் சொல்லவேண்டும் வேண்டாததை கேட்பினும் சொல்லாதே.அரசாங்கம் மக்களின் தேவைகளை விரும்பி கேட்க விட்டாலும் குறைகளை எடுத்துசொல்வேண்டும் அதேவேளை விரும்பிக்கேட்டாலும் தேவையில்லாதவற்றை தவிர்த்துவிடவேண்டுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

70/696:மன்னரைச் சேர்ந்தொழுகல் திருக்குறள்

Image
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்பவ வேட்பச் சொலல்.மன்னரின் குறிப்றிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை விருப்புமாறு சொல்க.அரசர்களின் மன நிலைகள் எப்படி உள்ளது என்பதை அறிந்தே சிறந்த நேரத்தை தெரிந்து கொண்டே அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதையும் அறிந்தபின்னரே அவர்கள் விருப்பும் வகையில் எச்செயலையும் சொற்களையும் உபயோகிக்க வேண்டுமேன எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

70/695:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.மன்னர் இரகசியம் பேசும்போது உற்றுக்கேட்டலும் வற்புறுத்திக் கேட்டலுமின்னிற அவராக் கூறின் கேள்.மனிதர்கள் யாராவது இரகசியமாக பேச எண்ணி பேசிக்கொண்டிருந்தால் அதை ஒட்டுக்கேட்டல் ஆகாது அத்தோடு அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து கேட்கவும் கூடாது அதே நேரத்தில் அவர்களாகவே வந்து அந்த இரகசியம் என்னவென்று சொன்னால் அதை கேட்பதில் தவறில்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

70/694:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
70/694:செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அறிவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.அரசர் அருகில் இருக்கும் போது காதோடு மறைவாக பேசும் தலையும் மன்னருடன் சிரித்தலையும் நீக்கி நடக்க வேண்டும்.அரசர்களும் அறிவாளிகளும் நிறைந்திருக்கும் சபையில் காதோடு காதாக பேசுதலையும் சபையோரை பழித்தும் நகைத்து பேசுதல்களை தவிர்த்துக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

70/693:திருக்குறள்-மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. பெரும் பிழைகள் வாராதப்படி காத்துக் கொள்ளவேண்டும் அரசர் சந்தேகம் கொண்டபின் தெளிவித்தல் அரிது .மேல் அதிகாரிகளுக்கு சந்தேகம் வருகின்ற மாதிரியான பெரிய பிழைகளை செய்துவிடக்கூடாது அப்படி செய்து அது அவர்களுக்கு தெரிய வந்தால் பிழைகளை திருத்தவும் முடியாது அவர்களுடன் பேசி தெளிவு படுத்தி தீர்த்துக்கொள்ளவுதும் கடினமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

70/692:திருக்குறள் மன்னரைச்-சேர்ந்தொழுகல்

Image
மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந்தரும்.மன்னர் விரும்பியதைத் தான் விரும்பாமலிருந்தால் அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும்.ஆட்சியாளர்கள் விரும்புவதை மக்களும் விரும்பதிருந்தால் ஆட்சியாளர்களால் மக்களுக்கு நிலையான முன்னேற்றங்கள் கிடைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

70/691:திருக்குறள் -மன்னரைச் சேர்ந்தொழுகல்

Image
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார். மனம் மாறும் மன்னரொடு பழகுபவர்  மிக நெருங்காமலும் நீங்காமலும் குளிர்காய்பவர் போல் நடந்துகொள்ளவேண்டும்.அடிக்கடி மனம் மாறுகின்ற அரசர்களுடன் மக்கள் சேர்ந்தும் சேராமாலும் இருந்தே வாழ்க்கையை நாடத்தவேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .