Posts

Showing posts from October 3, 2018

30/300:திருக்குறள்-வாய்மை

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.யாம் உண்மை என்று அறிந்தவற்றுள் உண்மையைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மனிதர்கள் அறிந்தவற்றில் சிறந்தவை என்றால் அது உண்மைதான் உண்மையே பேசி உத்தமர்களாக வாழ்வினை வாழ்வதை விட சிறந்ததாக கூறுவதற்கு இந்த உலகில் எதுவுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.  

30/299:திருக்குறள்-வாய்மை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்ய விளக்கே விளக்கு.புற இருளை போக்கும் விளக்குகளெல்லாம் விளக்கல்ல மன இருளான பொய்யை விலக்குவதே விளக்கு எனப்படும்.வெளியில் ஒளியற்ற  நிலையை போக்கி வெளிச்சத்தை தரும் தீபங்கள் எல்லாம் சிறந்த தீபங்கள் அல்ல குடிமக்களின் மன இருளை அகற்ற  பொய் சொல்லாது உண்மையை எடுத்துக்கூறும் விளக்கமே தலை சிறந்த தீபமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

30/298:திருக்குறள்-வாய்மை

புறந்தூய்மை நீரான்  அமையும் அகந்தூய்மை வாய்மையான் காணப்படும்.உடல் தூய்மை நீராடுவதால் ஏற்படும் ஆனால் உள்ளத்தூய்மை உண்மை பேசுவதால் அமையும்.மனித வாழ்க்கையில் உங்கள் உடல்களை களுவுவதால் உங்கள் உடல்கள் தூய்மை பெறலாம் ஆனால் அதே மனிதர்கள் உண்மை பேசினால் மட்டுமே மனிதர்களின் உள்ளங்கள் தூய்மை அடையும் உண்மை பேசி உத்தமர்களாக வாழ்வதே மனிதவாழ்வின் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/297:திருக்குறள்-வாய்மை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.பொய் பேசாமை என்னும் நல்வழியை என்றும் கடைப்பிடிப்பவனுக்கு அதைவிட அறம் செய்வதற்கு வேறில்லை.மனிதர்கள் பொய் பேசாமல் வாழ்க்கையை அற நெறிகளின் படி வாழ்ந்து வந்தாலே மனதில் தெய்வம் வீற்றிருக்கும் அதன் பின்பு தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வணக்கவேண்டிய அவசியமுமில்லை அறச்செயல்கள் செய்யத்தேவையுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.