Posts

Showing posts from November 7, 2018

41/407:திருக்குறள்-கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவையற்று.நுண்மை மாண்பு கூர்மையறிவு இல்லாதவன் அழகான பொம்மை போன்றவன்.இந்த உலக வரலாற்றில் நல்ல அறிவு கூர்மையான புத்தி நல்லொழுக்கத்தின் பணிவு இல்லாதவர்கள் ஒரு வடிவான பொம்மை போன்றவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

41/406:திருக்குறள்-கல்லாமை

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லாதவர்.உயிரோடு வாழ்ந்தாலும் கூட கல்வியறிவு இல்லாதவர் உவர் நிலம் போன்றவர்.மனிதர்களின் வாழ்வில் கல்வியறிவு இல்லாதவர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் பயிர் செய்யமுடியாத விவசாய நிலம் போன்றவர்கள் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

41/405:திருக்குறள்-கல்லாமை

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். கற்றவருடன் கூடி உரையாடும் போது கல்லாதவினின் மதிப்பு குறைத்து போகும்.உலக மக்களின் வாழ்வுதனில் கற்றோர்களும் கல்லாதவர்களும் வாழ்கின்றனர் வாழ்வின் அடிப்படையில் கற்றவருடன் கூடி உரையாடும் போது கல்லாதவர்களின் மதிப்பு குறைந்தே காணப்படும் அதனால் கற்றோர்கள் முன் கல்லாதார் மிகவும் பேசாமல் இருப்பதே நன்று என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

41/404:திருக்குறள்-கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடையார். கல்லாதவனின் இயற்கையறிவு கூர்மையுடையதாயினும் அறிஞர் பயன்படுத்தமாட்டார்.கற்றோர்கள் கல்லாதவர்களின் இயல்பான அறிவு கூர்மையாக இருத்தாலும் அறிஞர்களும் கற்றோர்களும் கல்லாதவர்களின் அறிவைப்பயன்படுத்தமாட்டார்கள் . கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பிருக்கும் கல்லாதவருக்களுக்கு செல்லுமிடங்களில் சிறப்பிருக்காது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

41/403:திருக்குறள்-கல்லாமை

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்.கற்றவன் முன் பேசாது இருப்பாரேயானால் கல்லாதவரும் மிக நல்லவரே.படித்தவர்கள் முன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்று பேசாது படித்தவர்கள் முன்னிலையில் வாய்யாடக்கி மவுனமாக வாழ்ந்தால் படிக்காதவர்களும் மிக சிறந்த மனிதர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

41/402:திருக்குறள்-கல்லாமை

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் வெண்கா முற்றற்று .படிப்பறிவு இல்லாதவன் பேச விரும்புதல் முலையிரண்டும் இல்லாதவள் புணர்தலை விரும்புவது போலும்.படித்த அனுபவமில்லாத மனிதர்கள் மாபெரும் சபைகளில் பேச விரும்புவது வாழ்வில் மேடைகளில் பேசும் அனுபவமில்லாமல் பேசத்தொடங்குவது போலாகும் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

41/401:திருக்குறள்-கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளஸ்.அறிவுக் சிறப்பிற்கு எதுவான் நூல்களை கல்லாது அவையேறுதல் விளையாடும் இடமின்றி காய் உருட்டுவது போலாகும்.இந்த உலகத்தில் மனிதர்களின் வாழ்வில் அறிவை கற்றுக்கொள்வது வாழ்வின் சிறப்பம்சமாகும் கல்வியறிவை வளர்த்துக்கொள்ள நூல்களை கல்லாது அவையேறுதல் என்பது வாழ்வின் சிறப்பாகாது விளையாட்டு மைதானம் இன்றியே பந்து விளையாட முற்படுவது போலாகுமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

40/400:திருக்குறள்-கல்வி

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு மாடல்ல மற்றையவை.ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே பிற செல்வம் செல்வமாகாது.இவ்வுலகில் மனிதர்களின் வாழ்வில் கல்வியை கற்றுக்கொள்வதே வாழ்கைக்கு சிறந்தது வாழ்வில் அழியாத செல்வம் கல்விச்செல்வமே அதை விட எனைய செல்வங்கள் இருந்தாலும் கல்விச்செல்வத்துக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

40/399:திருக்குறள்-கல்வி

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.தனக்கு இன்பந்தரும் கல்வியை பிறர்க்கு கூறி இன்புறுவதைக் கண்டு மேலும் கல்விதனை விரும்புவர்.மனிதர்கள் தங்களுக்கு இனிமையும் சிறப்பும் தரும் கல்வியை கற்று இன்புற்று மற்றவர்களுக்கும் தாங்கள் கற்றவற்றை கூறி இன்பமடைந்து மேலும் மேலும் வாழ்வுதனில் கல்வியில் மேன்மையடைத்து வாழவே மனம் விரும்புமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து.ஒர் பிறவியில் கற்ற கல்வி ஏழுபிறவியிலும் வந்து உதவும்.இந்த உலகில் மனிதர்கள் மனித வாழ்வினில் படித்தபடிப்பானது ஏழுழேழு ஜென்மங்களிலும் வந்து உதவி செய்யுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.