Posts

Showing posts from November 14, 2018

43/430:திருக்குறள்-அறிவுடைமை

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.அறிவுடையவர்கள் தம் அறிவினாலேயே எல்லாம் உடையவராவர் அறிவில்லாவர்கு எல்லாம் இருந்தும் இல்லாதவரே.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்வுதனில் அறிவுடையார் என அழைக்கப்படுவது புத்தி கூர்மையான செயலை அறிவான விளக்கத்தை அளிக்கக்கூடிய மனிதர்களை இந்த உலகை அறிந்த அறிவுடையோரை பகுத்தறிவு உள்ளோரை அறிவுடையோர்கள் எல்லாம் உடையார் எனலாம் அறிவுசெல்வமில்லாதார் வாழ்வினில் எல்லாம் கிடைத்தும் இல்லாதவர்களே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/429:திருக்குறள்-அறிவுடைமை

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். துன்பம் வருமுன்னர் காக்கத் தெரிந்த அறிஞர்கு அதிர்சியான துன்பம் வராது.உலகத்தில் மனிதர்களின் வாழ்வுதனில் துன்பம் வருவதுண்டு அத்துன்பத்தை அறிஞர்கள் அல்லது தொலை நோக்குடையோர்கள் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றப்போல் வாழ்க்கையை வழிநாடத்தினால் மிக அதிர்சியான துன்பத்தை எதிர்கொள்ள தேவையில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

43/428: திருக்குறள்-அளிவுடைமை

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் மடத்தன்மை அஞ்சவேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை.மக்கள் ஆகிய உங்கள் வாழ்வில் அஞ்சவேண்டிய இடத்தில் அஞ்சப்பட்டே ஆக வேண்டும் அஞ்சப்படாமல் இருப்பது அறிவுடைமையல்ல பயப்பிடவேண்டிய இடத்தில் பயந்துதான் ஆகவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக் குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/427:திருக்குறள்- அறிவுடைமை

அறிவுடையார் ஆவதறிவார் அறிவில்லார் அஃதறி கல்லாதவர். நிகழப்போவதை அறிபவர் அறிவுடையார் அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர்.அறிவுடையார் என்பது கற்றதால் ஆகலாம் அல்லது சகலதும் அறிந்து இந்த உலகை புரிந்து அறிவுடையார் ஆகலாம் அப்படிப்பட்டவர்கள் ஆவதறிவார்கள் அறிவில்லாதார் நிகழப்போவதை முன்கூட்டியே கணக்கிடத்தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/426:திருக்குறள்- அறிவுடைமை

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு.உலகம் எவ்வழி செல்கிறதோ அத்துடன் ஒத்துப் போவதே அறிவுடமை.இந்த உலகம் எதை விருப்புகின்றதோ அதை நடைமுறையில் ஆக்குவதும் இந்த உலகம் எப்படி நகர்த்தபடுகின்றதோ அதை பின் பற்றுவதே அறிவுடமையாகும்.அதைவிடுத்து அறிவில்லாமல் உலகத்துடன் பகைத்து கொள்ளவது அறிவுடைமையாகாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

43/425:திருக்குறள்-அறிவுடைமை

உலகம் தழீஈய தொன்பம் மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு.உலகத்தோடு ஒத்துபோவது சாமர்த்தியம் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் அடிமையாகாதிருப்பது அறிவு.மனிதர்களின் வாழ்வுதனில் இந்த உலகத்தோடு ஒத்து வாழப்பழகவேண்டும் அதேபோல் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அடிமையாகாதிருப்பது அறிவு எனவும் அதே நேரத்தில் மகிழ்சியாக வாழ்வதா அல்லது துன்பத்தை வாழ்கைக்குள் கொண்டு வருவதா என்பதை மக்கள் வாழ்கின்ற வாழ்வை பொறுத்தே அமையுமேன எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

43/424:திருக்குறள்-அறிவுடைமை

எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு.அருமையானவற்றை விளக்கி கூறவேண்டும் பிறர் கூறும் நுட்பமானவற்றை அறிந்து கொள்வது அறிவு.மக்களின் வாழ்க்கைதனில் சிறந்தவற்றை விளக்கமாக எடுத்துரைக்கவேண்டும் அதைப் பிறர் விளங்கிகொள்ளும் வண்ணம் விரிவாக்கம் செய்தல்வேண்டும் மற்றவர்கள் கூறுகின்ற மதி நுட்பத்தை மக்கள் அறிந்து வாழ்க்கை நடத்துவது அறிவின் சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

43/423:திருக்குறள்- அறிவுடைமை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யார் வாய் வழியாகவும் எச்சொல் வந்தாலும் அச்சொல்லின் உண்மையை உணர்வதே அறிவு.இந்த உலகின் மானிடர்களின் வாழ்வுதனில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் தங்களிடம் உள்ள அறிவுபூர்வமான நற்சிந்தனைகளையும் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவிரும்புவார்கள் அப்படி வருகின்ற எச்சொல் ஆயினும் அச்சொல்லின் உண்மையை உணர்வதே அறிவுடமையாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம். உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.