Posts

Showing posts from March 5, 2020

102/1020:திருக்குறள்-நாணுடைமை

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று. நாணமற்றவர் வாழ்வு மரபொம்மை கயிற்றால் ஆடியது போலும். வெட்கமில்லாதவர்களின் வாழ்வு பொம்மல் ஆட்டத்துக்கு ஆட்டி வைக்கப்படும் மரபொம்மைகள் ஆட்டிவைப்பவனின் கயிற்றின் ஆசைவுகளுக்கு ஏற்றப்போல் ஆடுவதே அவற்றுகான தனிஉணர்வுகள் எதுவுமில்லை அதைப்போலவே நாணமற்றவர்களின் வாழ்வுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

102/1019:திருக்குறள்-நாணுடைமை

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.கொள்கை விட்டோர் குடி அழியும் நாணம் விட்டால் நன்மை கெடும்.கொள்கைகள் இல்லாத மனிதர்களின் குலமே அழியும் வெட்கமில்லாதவர்களின் நன்மையான விடயங்கள் கெட்டழிந்து போகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1018:திருக்குறள்-நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான்நாண னாயின் அறம்நாண னாயின் அறம் நாணத் தக்கது உடைத்து.பிறர் வெட்குதற்குரிய செயலை தான் வெட்கப்படாது செய்பவர் செயலுக்கு அறக்கடவுடள் வெட்கும்.மற்றவர்கள் வெட்கப்பட்டு செய்யாத செயல்களை வெட்கமில்லாமல் செய்பவர்களின் செயலுக்கு அறக்கடவுளே வெட்கி தலைகுணியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1017:திருக்குறள்-நாணுடைமை

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.நாணமிக்கவர் அதற்காக உயிர்விடுவார் உயிருக்காக நாணத்தை விடார் .வெட்கத்துக்கு அஞ்சுகின்ற மனிதர்கள் தங்களின் உயிரைக்கூடா விடத்தயங்கமாட்டார்கள் உயிருக்குகாக வெட்கத்தை விட்டு வாழமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1016:திருக்குறள்-நாணுடைமை

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.வெட்கத்தை வேலியாக கொண்டு வாழாதவரை நல்லோர் மதியார். இந்த உலகில் மனிதர்களின் வாழ்வியல் நெறிகளில் வெட்கம் என்பதை தங்களின் வாழ்வியல் சிறப்பாக கொண்டு வாழவேண்டும் அது இல்லாதவர்களை இந்த சமுதாயத்தில் மதிக்கப்பமாட்டார்கள் அவமதிப்புடனேயே வாழ்வினை கழிக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1015:திருக்குறள்-நாணுடைமைள

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு. தன்பழிக்கும் பிறர்பழிக்கு அஞ்சுபவரை நாணத்தின் வாழ்விடமென உலகம் போற்றும்.இந்த உலகின் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பழிகள் செய்வதுண்டு தன் பழிகளை தானே உணர்ந்து நடப்பவர்களையும் பிறர்பழிகளுக்கு அஞ்சி தங்கள் வாழ்வை நேர் நடத்தி வாழ்கின்றவர்களையும் நாணத்தின் வாழ்விடமென இந்ந வையகம் போற்றும் மனித வாழ்வை நெறிபடவாழவேண்டும் இல்லாவிடின் அது ஒரு மன நோஎடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1014:திருக்குறள்-நாணுடைமை

அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணி அன்றோ பீடு நடை.நல்லோர்க்கு வெட்கம் ஒர் அழகு வெட்கமற்ற வீறுநடை ஒர் நோயாகும்.உலகில் மனிதர்களின் செய்ததவறுகளுக்கு வெட்கப்படுவது மனித தன்மையை காட்டும் அது ஒரு மிக அழகான விஷயமாக கருதப்படுகின்றது. மிகநல்லோர்கள் அச்சம் வெட்கம் நாணம் உள்ளடங்கிய சிறந்த வாழ்வைவாழ்வார்கள் அது இல்லாதார் வீறுநடை போட்டு வாழ்வது சமுதாயத்தில் புரிந்த தவறுகளுக்கு அடங்காமை என்பதையே எடுத்துக்காட்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1013:திருக்குறள்-நாணுடைமை

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.உயிர்கள் உடம்பைப் பற்றி நிற்கின்றது நிறைகுணம் வெட்கத்தைக் கொண்டு நிற்கின்றது. உடம்பில்தான் உயிர் உயிர்வாழ்கின்றது அதேபோலதான் சிறப்பு குணங்கள் கூச்சத்தையும் வெட்கத்தையும் நாணத்தையும் வாழ்வின் நெறிகளாக கொண்டிருக்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1012:திருக்குறள்-நாணுடைமை

ஊணுடை எச்சம் உயிர்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.உணவு உடை பின்விணை அனைவர்க்கும் பொது நாணமே நன்மக்களின் சிறப்பு. உணவுகள் உடைகளின் பழக்க வழக்கங்கள் அனைத்து மனிதர்களுக்கும் ஒன்றே ஆனால் சிறந்த மனிதர்களுக்கான சிறப்புகள் மானம் வெட்கம் ரோஷம் கூச்சமான பணிவுகளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

102/1011:திருக்குறள்-நாணுடைமை

Image
கருமத்தால் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.நாணம் என்பது தகாத செயலுக்கு நாணுதல் பெண்களின் நாணம் வேறுபட்டது.முறையற்ற செயல்களுக்கு வெட்கப்படுவதற்கும் பெண்களின் கூச்சசுபாவமான வேட்கத்திற்கும் வேறுபாடுகள் வேறு வேறு என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.