Posts

Showing posts from March 16, 2019

53/523:திருக்குறள்- சுற்றந்தழால்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந்தற்று . சுற்றத்தாரோடு மனங்கலந்து வாழதவன்  வாழ்க்கை கரையற்ற குளம் நீர் நிறைந்தது போன்றதாகும்.சமூகத்தோடு ஒத்து வாழதவர்களின் வாழ்வியல் கரையில்லாத குளத்தில் நீர்த்தேக்கம் தேங்கியிருப்பது போலாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் .  அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

53/522:திருக்குறள்-சுற்றந்தழால்

விருப்பாறச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும். ஒருவருனுக்கு அன்பு நீங்கா சுற்றமிருப்பின் அது அவனுக்கு மேன்மேலும் செல்வத்தை கொடுத்துக்  கொண்டேயிருக்கும்.இந்த பூமியில் வாழுகின்ற மனிதர்களுக்கு அன்பு உள்ளங்கள் கொண்ட சமுகம் இருக்குமாயின் அவர்களுக்கு மேன்மேலும் செல்வம் வந்து சேரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் .  அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

53/521:திருக்குறள்-சுற்றந்தழால்

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணேயுள்.ஓருவன் செல்வமெல்லாம் இழந்து ஏழ்மை நிலையடைந்த பின்னும் பழைய உறவை பாராட்டும் தன்மை சுற்றத்தாரிடம் உண்டு.மனிதர்களின் வாழ்வியல் சிந்தனையில்  மக்கள் செல்வச்செழிப்பாக வாழ்ந்து அந்த செல்வங்கள் எல்லாவற்றையும் வாழ்வில்  இழந்து சமுகத்தில் ஏழ்மையாக  வாழ்க்கை நடத்தும் போதும் கடந்தகால உறவை பாராட்டி பேசும் வழக்கம் உற்றார் உறவினர்கள் சமுகத்தார் மத்தில்  நிலவுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

52/520:திருக்குறள்- தெரிந்து வினையாடல்

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. செலாற்றுபவன் நேர்மை தவறாது இருப்பின் இவ்வுலகு மாறாது இருப்பின் இவ்வுலகு மாறாது எனவே மன்னன் அவனை தினமும் ஆராய்தல் வேண்டும்.உழைத்து வாழும் மக்களின் உள்ளங்கள் கவலையடையாமல் இருந்தால் சமுதாயத்தில் செழிப்பு இருக்கும் அதனால் அரசாங்கங்கள் உழைத்து வாழும் மக்களுக்கு உதவவேண்டும் அப்படி உதவினால் நாடே செழிப்பாக இருக்குமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

52/519:திருக்குறள்-தெரிந்து வினையாடல்

வினைக்கண் வினையுடையான் கேண்மை  வேறாக நினைப்பானை நீங்கும் திரு. ஏற்றுக் கொண்ட செயலில் மாறாத முயற்சியுடையவனை சந்தேகம் கொள்ளும் அரசனை விட்டு திருமகள் நீங்கி விடுவாள். சிறந்த முறையில் காரியங்களை முடித்து நம்பிக்கையுடன் நடந்து கொள்பவர்களையும்  சந்தேகப்படும் எவரிடமும் திருமகள் நிலைத்திருக்க மட்டாளென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .